• May 19 2024

நயன் திருமணத்தில் இவ்வளவு கட்டுப்பாடுகளா..கலந்து கொள்ள தயக்கம் காட்டும் பிரபலங்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

ஏழு வருட காதலை கடந்த நயன்- விக்கி தம்பதியினர் நாளை திருமண பந்தத்தில் கைகோர்க்க உள்ளனர். திருமணத்திற்காக ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில் திருமணத்திற்கான ஏற்பாடுகள் வெறித்தனமாக நடைபெற்று வருகின்றது.

இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்யும் இவர்கள் மகாபலிபுறத்திலுள்ள நட்ஷத்திர ஹோட்டலில் பெரிய செட் அமைத்து மிக பிரமாண்டமான அளவில் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

அவர்களது திருமணத்து நெருங்கிய உறவினர்கள் மற்றும் சினிமா பிரபலங்களும் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

அந்தவகையில் விக்கி-நயன் தம்பதியினரின் திருமணத்தை படம் ஆக்கும் உரிமையை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம் பெருந்தொகை கொடுத்து வாங்கி உள்ளது. இதனை இயக்கும் பொறுப்பை இயக்குநர் கவுதம் மேனன் ஏற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால் திருமணத்துக்கு வருபவர்களுக்கு அதிக கட்டுப்பாடுகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக திருமணத்திற்கு வருபவர்கள் செல்போன் கொண்டுவர கூடாது, போட்டோ எடுக்க கூடாது போன்றன இவற்றில் முக்கியமாக உள்ளததாம், ஏனெனில் திருமணத்தை படம் ஆக்கும் உரிமையை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம் பெருந்தொகை கொடுத்து வாங்கி உள்ளதால் திருமணம் குறித்த வீடியோ எதுவும் லீக் ஆகிவிடக்கூடாது என்பதன் காரணமாக இத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement