• May 19 2024

'ஜெயிலர்' திரைப்படம் குறித்து சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ள விமர்சனம்... அப்போ படம் செம ஹிட் தான் போல..!

Prema / 9 months ago

Advertisement

Listen News!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 4-ஆவது முறையாக நடித்துள்ள திரைப்படம் ‘ஜெயிலர்’. நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இந்த படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார். 

மேலும் இப்படத்தில் ரம்யாகிருஷ்ணன், வசந்த் ரவி, யோகிபாபு, சிவராஜ்குமார், மோகன்லால், தமன்னா, சரவணன், ஜாக்கி ஷெராஃப், விநாயகன், சுனில் உள்ளிட்ட பலரும் இணைந்து நடித்துள்ளனர். இந்த படம் நாளை  உலகம் பூராகவும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகின்றது.


இதனை முன்னிட்டு பலரும் தங்களது வாழ்த்துக்களை படக்குழுவினருக்குத் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் சிவகார்த்திகேயனும் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கின்றார்.


இது குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ள வீடியோவில், மாவீரன் படத்தை பார்த்துவிட்டு ரஜினிகாந்த் தனக்கு போன் பண்ணி வாழ்த்தியதாகவும், படம் சூப்பராக இருந்தது நான் ரொம்ப என்ஜாய் பண்ணேன் எனக் கூறியதாகவும் மிகவும் சந்தோசத்துடன் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாது இதற்காக ரஜினிக்கு நன்றி தெரிவித்த சிவகார்த்திகேயன், நாளை வெளியாகவுள்ள ஜெயிலர் திரைப்படத்தை திரையில் காண ஆவலுடன் இருக்கிறேன் என்றும், கண்டிப்பாக ஜெயிலர் திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஹிட்டாகும் எனவும் கூறியுள்ளார் சிவகார்த்திகேயன்.

ஜெயிலர் படம் குறித்து சிவகார்த்திகேயன் இப்படி ஒரு பாசிட்டிவ் விமர்சனத்தைக் கொடுத்துள்ளமையை அடுத்து ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர்.

Advertisement

Advertisement