சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் நடித்து வரும் நடிகை தான் ரேகா நாயர். இவர் பார்த்திபன் இயக்கத்தில் வெளியான இரவின் நிழல் என்னும் திரைப்படத்தில் ராணி என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபல்யமானார். அந்த படத்தில் ஒரு காட்சியில் மார்பகத்தைக்காட்டி அரைநிர்வாணமாக நடித்திருந்ததால், பெரும் சர்ச்சையில் சிக்கினார்.
இவர் அண்மையில் ஒரு பேட்டியளித்திருந்தார்.அதில் நான் என்ன உடை அணிய வேண்டும் என்பதை நான் தான் முடிவு செய்வேன். காலையில் வாக்கிங் செல்லும் போது, டவுசர் போட்டுக்கொண்டுதான் செல்வேன், 7,8 மணிவரை அதே உடையில் தான் இருப்பேன்.
ஆனால், அந்த உடையை போட்டுக்கொண்டு நான் தி நகருக்கோ, மாலுக்கோ போனால், மற்றவர்கள் கை வைக்கத்தான் செய்வார்கள். அந்த இடத்தில் அந்த ஆடையை போட்டுக்கொண்டு சென்றது யாருடைய தப்பு.அதே போல, நான் மாராப்பை இறக்கிவிட்டுத்தான் புடவை கட்டுவேன் அது என்னுடைய ஸ்டைல், இதை நான் அழகியலாக பார்க்கிறேன்.
இதை ஆண்கள் ரசிக்கிறார்கள் இதில் என்ன தப்பு இருக்கிறது. நான் பெரிய கம்பல் போட்டா எப்படி நன்றாக இருக்கிறது என்று மற்றவர்கள் சொல்லுகிறார்களோ அதே போலத்தான் என் அழகையும் ரசிக்கிறார்கள். இதில் தப்பே இல்லை என்று நடிகை ரேகா நாயர் பேட்டியில் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!