• Apr 28 2024

விஜய் சேதுபதி மற்றும் சூர்யாவைத் தொடர்ந்து வில்லனாகும் சிவகார்த்திகேயன்- அதுவும் யாருடைய படத்தில் தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

மிமிக்கிரி ஆட்டிஸ்டாகவும் காமெடி நடிகராகவும் சின்னத்திரையில் அறிமுகமாகியவர் தான் சிவகார்த்திகேயன்.தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான மூன்று படத்தின் மூலம் காமெடியனாகவும் அறிமுகமாகினார். பின்பு மெரினா என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாகினார்.

தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்த இவர் தற்பொழுது வசூல் நாயகனாகவும் வலம் வருகின்றார். இதனால் இவருடைய படங்கள் மீதான எதிர்பார்பானது ரசிகர்களிடையே அதிகமாகக் காணப்படுகின்றது.இவருக்கு தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்.

அந்த வகையில் தற்பொழுது ஜதி ரத்னலு பட இயக்குநர் அனுதீப் கே.வி.யுடன் தெலுங்கு-தமிழ் என இருமொழிகளில்  உருவாகும் 'பிரின்ஸ்' படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார்.இந்த படத்தினை தயாரிப்பு நிறுவனமான அருண் விஸ்வாவின் சாந்தி டாக்கிஸ், Sri Venkateshwara Cinemas LLP, Suresh Productions இந்த   படத்தை தயாரித்துள்ளது.


இந்த படத்தில் நடிகர்கள் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.  இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நடிகை  மரியா ரியாபோஷாப்கா நடிக்கிறார். இந்த படத்தின் ஒட்டுமொத்த தமிழக உரிமையை கோபுரம் சினிமாஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. 

இந்த பிரின்ஸ் படம்  வரும் தீபாவளியை முன்னிட்டு நாளை அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகிறது.இந்நிலையில் நேற்று இரவு நடிகர் சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடல் நிகழ்வில் கலந்து கொண்டார்.


 அப்போது ரசிகர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். அதில் ஒரு ரசிகர், "எப்போ வில்லனாக (Antagonist) நடிக்க போறீங்க? ஒரு ரசிகனாக உங்களை வித்தியாசமான கதாபாத்திரங்களில் பாக்கனும்." என கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த சிவகார்த்திகேயன், "வித்தியாசமான கதாபாத்திரங்களில் என்னை கண்டிப்பாக பார்க்கலாம். கண்டிப்பாக முயற்சி பண்ணுவேன். வில்லன் ரோலில் நடிப்பது இயக்குனர்களை பொறுத்தது. அந்த இயக்குனரும் அவர்கள் சொல்லும் கதையையும் பொறுத்தது. அந்த மாதிரி இதுவரை யாரும் கதை சொல்லல. சொல்லும் போது கண்டிப்பாக யோசித்து பார்க்கிறேன்" என பதில் அளித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது..

Advertisement

Advertisement

Advertisement