• Jan 19 2025

ரோகிணியின் ரகசியத்தை உளறிய விட்டாரா வித்யா? மீனாவுடன் திடீர் சந்திப்பு..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சிறகடிக்க ஆசை’ சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த சீரியலில் நடிக்கும் சின்ன சின்ன கேரக்டருக்கு கூட இயக்குனர் முக்கியத்துவம் தருகிறார் என்பதும் அதனால் இந்த சீரியல் எந்த இடத்திலும் போரடிக்காமல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது என்பதையும் இந்த சீரியலில் தொடர்ந்து பார்த்து வருபவர்கள் அறிந்ததே.

இந்த நிலையில் இந்த சீரியலில் ரோகிணியின் தோழியாக நடித்து வித்யா கேரக்டரில் நடித்து வரும் ஸ்ருதி நாராயணன், அவ்வப்போது சில காட்சிகளில் மட்டும் தான் வருவார் என்றாலும் அந்த சில காட்சிகளில் கூட அவர் நடிப்பில் அசத்தி விடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரோகிணியின் உண்மை அனைத்தும் தெரிந்த ஒரே நபர் வித்யா தான் என்பதும் ரோகிணிக்கு இதற்கு முன்பு திருமணமாகி ஒரு குழந்தை இருப்பது, மலேசியாவில் அப்பா இருக்கிறார் என்பதெல்லாம் பொய் போன்ற அனைத்து உண்மைகளையும் தெரிந்த வித்யா தற்போது திடீரென மீனாவை சந்தித்து உள்ளதாக தெரிகிறது.

மீனா மற்றும் வித்யா ஆகிய இருவரும் சமீபத்தில் ரீல்ஸ் வீடியோ ஒன்றை தங்களது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் இருவருக்கும் சேர்ந்த காட்சிகள் படமாக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஒருவேளை ரோகிணியின் உண்மையை மீனாவிடம் வித்யா உளறி இருந்தால் ’சிறகடிக்க ஆசை’ சீரியலில் திடீர் திருப்பம் ஏற்படும் என்பது மட்டும் உறுதி.


Advertisement

Advertisement