• Apr 12 2026

பாடகி ஸ்ரேயா கோஷல் வாங்கிய புதிய வீட்டின் மதிப்பு இத்தனை கோடியா?

shali / 4 days ago

Advertisement

Listen News!

பிரபல பாடகியான ஸ்ரேயா கோஷல் சமீபத்தில் வொர்லி, தெற்கு மும்பை பகுதியில் ஒரு பிரீமியம் அபார்ட்மெண்ட் வாங்கியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இசை உலகில் முன்னணி இடத்தை பிடித்துள்ள ஸ்ரேயா கோஷல் , பல மொழிகளில் எண்ணற்ற ஹிட் பாடல்களை வழங்கி ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்துள்ளார்.


தகவல்களின்படி, இவர் வாங்கியுள்ள இந்த அபார்ட்மெண்ட் சுமார் 2,750 சதுர அடி பரப்பளவு கொண்டதாகும். மேலும், இதில் 3 கார் பார்க்கிங் வசதியும் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஆடம்பரமான வீட்டின் மொத்த மதிப்பு ரூ.29.7 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதற்காக அவர் ரூ.1.78 கோடி முத்திரைக் கட்டணமாகவும், பதிவு கட்டணமாக ரூ.30 ஆயிரமும் செலுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மும்பையின் முக்கிய மற்றும் உயர்ந்த பகுதிகளில் ஒன்றான வொர்லியில் வீடு வாங்குவது ஒரு பெரிய முதலீடாக பார்க்கப்படுகிறது.

இசை உலகில் தொடர்ந்து சாதித்து வரும் ஸ்ரேயா கோஷல், தனது வாழ்க்கை முறையிலும் முன்னேற்றம் அடைந்து வருகிறார் என்பதற்கான இன்னொரு உதாரணமாக இந்த புதிய சொத்து வாங்குதல் பார்க்கப்படுகிறது. இந்த செய்தி தற்போது ரசிகர்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement