• Sep 20 2024

கமல்ஹாசனைக் கட்டிப்பிடித்து தேம்பித் தேம்பி அழுத சிம்புவின் தந்தை- அடடே இது தான் காரணமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் முக்கிய நடிகரான கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் விக்ரம். இப்படத்தினை லோகேஷ் கனகராஜ். இயக்கியுள்ளார். கமலுடன் விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்டோரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மேலும் நேற்றைய தினம் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் இப்படத்தின் பாடல் மற்றும் ட்ரெய்லர் என்பன வெளியாகின. அதில் பேசிய கமல், “பலரும் என்னிடம் சொன்னார்கள் வருடத்துக்கு ஒரு படமாவது நடியுங்கள் என்று.

யாருமே முழு நேர அரசியல்வாதி இல்லை. நான் கூட முழு நேர நடிகன் இல்லை. நான் அரசியலுக்கு செல்கிறேன் என்று தெரிந்ததும் சிம்புவின் தந்தை T.ராஜேந்தர் என் வீட்டுக்கு வந்து கட்டிப்பிடித்து தேம்பி தேம்பி அழுதார்.

‘உங்களால் எப்படி சினிமா இல்லாமல் இருக்க முடியும்’ என்று கேட்டார். அந்த கேள்விதான் என்னை இங்கு வந்து நிறுத்தியுள்ளது எஸ்.டி .ஆர் குறித்து கமல் பேசியுள்ளது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 'விக்ரம்' படம் ஜுன் 3 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/5GFqvFlN1tI

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement