• May 22 2024

குட் நியூஸ் சொன்ன சிம்பு பட நடிகை.குவியும் வாழ்த்துக்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சிறுவயதில் இருந்தே பல ஹிட் படங்களை கொடுத்தவர் தான் நடிகர் சிம்பு.அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் சிலம்பாட்டம்.


இவ்வாறு இருக்கையில் சிம்புவின் சிலம்பாட்டம் படத்தில் ஹீரோயினாக நடித்து அறிமுகம் ஆனவர் சனா கான். அவர் அதற்கு பிறகு சில படங்களில் நடித்தார். மற்ற மொழிகளிலும் சில படங்கள் அவர் நடித்து இருக்கின்றார்.


 அவர் சில வருடங்களுக்கு முன்பு இஸ்லாம் மதத்திற்கு மாறுவதாக அறிவித்தார். அந்த மதத்தின் பெண்கள் போல எப்போதும் ஹிஜாப் அணிந்து தான் புகைப்படங்களும் வெளியிட்டு வருகிறார். அதே மதத்தை சேர்ந்த ஒருவரை 2020ல் திருமணம் செய்துகொண்டார் அவர்.


திருமணத்திற்கு பின் நடிப்பதை நிறுத்திவிட்டார். இவர் கடைசியாக ஹிந்தியில் வெளிவந்த Special OPS எனும் வெப் சீரிஸ் ஒன்றில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.


இவ்வாறுஇருக்கையில், திருமணத்திற்கு பின் கணவருடன் செட்டிலாகிவிட்ட நடிகை சனா கான் கர்ப்பமாக இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

இதை அவரே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இதனால் நடிகை சனா கானுக்கு ரசிகர்களும், திரையுலகை சேர்ந்த பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.




Advertisement

Advertisement