• May 04 2024

வலிமை சுமாரான படம்-விமர்சனத்தைப் பதிவிட்டு மீண்டும் சர்ச்சைக்குள்ளான ஸ்ரீ நிதி-

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிப்பதைத் தாண்டி பைக் ரைடிங் செய்வதிலும் பிரபல்யமானவராக வலம் வருபவர் தான் அஜித்.இவர் தற்பொழுது தனது 61 வது படத்தில் நடித்து வருகின்றார்.இப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பானது அண்மையில் முடிவடைந்தது.

இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்டப்படப்பிடிப்பானது புனேயில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகிய திரைப்படம் தான் வலிமை. இப்படமானது தியேட்டர்களில் ரிலீஸ் ஆன போது,படம் தனக்கு பிடிக்கவில்லை என youtube public opinion வீடியோவில் நடிகை ஸ்ரீநிதி கூறி இருந்தார்.

இதனால் ரசிகர்கள் இவரைத் திட்டித் தீர்த்தனர். இதன் காரணமாக மன அழுத்தத்திற்கு உள்ளான இவர் சிம்புவைக் காதலிப்பதாகவும் கூறி பரபப்பையும் ஏற்படுத்தி இருந்தார்.

இந்நிலையில் தற்போது மீண்டும் இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ வெளியிட்டு வலிமை சுமாரான படம் தான் என கூறி இருக்கிறார் ஸ்ரீநிதி.வலிமை படத்தை பற்றி ஏன் விமர்சித்தேன் என்றால் அது ஒரு படம், அதை விமர்சனம் செய்ய யாருக்கு வேண்டுமானாலும் உரிமை இருக்கிறது."

"இப்போவும் கேட்டால் 'வலிமை சுமாரான படம்' என்று தான் சொல்வேன். அது எனக்கு பிடித்த படம் இல்லை என்றாலும் இந்த சமுதாயத்திற்கு தேவையான ஒரு படம் தான்" என ஸ்ரீநிதி குறிப்பிட்டு இருக்கிறது.இப்போது எதற்காக வலிமை பற்றி மீண்டும் பேசுறீங்க என நெட்டிசன்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொன்ன அவர், 'என்னை வீட்டில் வைத்து பூட்டிவிட்டார்கள். தனிமையில் இருக்கிறேன். என்ன செய்ய' என கேட்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement