• May 10 2024

ரஜினி சொல்லல என்றால் அப்படி பண்ணியிருக்க மாட்டேன்- கமல் படம் குறித்து பேசிய கே எஸ் ரவிக்குமார்

stella / 1 year ago

Advertisement

Listen News!

1990 ஆம் ஆண்டு புரியாத புதிர் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கே எஸ் ரவிக்குமார்.இதனைத் தொடர்ந்து சேரன் பாண்டியன், புத்தம் புது பயணம், ஊர் மரியாதை, பொண்டாட்டி ராஜ்ஜியம் புருஷ லட்சணம், நாட்டாமை, பெரிய குடும்பம், முத்து, பரம்பரை, அவ்வை சண்முகி, பிஸ்தா, நட்புக்காக, போன்ற பல படங்களில் தொடர்ச்சியாக ஹிட் கொடுத்துள்ளார்.

இயக்குநராக மட்டும் இல்லாமல் தான் இயக்கும் படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து அனைவரையும் வியக்க வைப்பார். இந்த நிலையில் இவர் தற்பொழுது கதாப்பாத்திரங்களுக்கு முக்கியம் உள்ள சில படங்களில் நடித்தும் வருகின்றார்.

இந்நிலையில் தான் தயாரிப்பாளராக ஆன சூழ்நிலையை குறித்து கூறியுள்ளார் கே.எஸ் ரவிக்குமார். அதில் கூறியதாவது "படையப்பா படத்திற்கு பிறகு ரஜினியின் வீட்டுக்கு சென்றேன். அப்பொழுது கமல் என்னையே தெனாலி படத்தை தயாரிக்க சொல்வதாகவும் கூறினேன். அதைக் கேட்ட ரஜினி அப்படி என்றால் உடனே அட்வான்ஸ் பணத்தை கொடுத்து விடுங்கள் என்று கூறினார்.

அவரே சொல்லிவிட்டார் என்றால் சரியாகத்தான் இருக்கும் உடனே செய்யுங்கள் என்று கூறினார். அதன் பிறகு ஹேராம் திரைப்படம் நீண்ட நாட்களாக படமாக்கப்பட்டு அதன் பிறகு தெனாலி படம் முடிய பல நாட்கள் ஆனதால் , கமல் படத்தின் டிஸ்கஷனுக்கு எல்லாம் ரஜினி வந்தார். நான் தயாரிப்பாளராக ஆக முக்கிய காரணம் ரஜினிகாந்த் தான் என்று கே.எஸ் ரவிக்குமார் கூறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement