• May 13 2024

குட்டி வயிறுடன் படப்பிடிப்புத் தளத்தில் வலம் வரும் ஆல்யா பட்- லேட்டஸ்டாக வெளியாகிய போட்டோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

பாலிவுட்டின் நட்சத்திர ஜோடியான ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் இந்த ஆண்டு திருமண பந்தத்தில் இணைந்தனர். மேலும் ஆல்யா பட் என்பவர் பிரபல பிலிம்மேக்கர் மகேஷ் பட் மற்றும் நடிகை சோனி ரஸுடன் அவர்களின் மகள் ஆவார்.

இவர் கரண் ஜோஹர் இயக்கிய ஸ்டூடண்ட் ஆஃப் த இயர் என்ற திரைப்படத்தில் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதை தொடர்ந்து ஹைவே, 2 ஸ்டேட்ஸ், அம்டி சர்மா கி துல்ஹனியா போன்ற வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

பாலிவுட் நடிகரான ரன்பீர் கபூரும், நடிகை ஆலியா பட்டும் பிரம்மாஸ்திரா படத்தில் சேர்ந்து நடித்தபோது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதல் 14ந் தேதி பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

இதையடுத்து, நடிகை ஆலியா பட் தான் கர்ப்பமாக இருப்பதாக பகிர்ந்து அறிவித்தார். அந்த பதிவில், Our baby ….. coming soon என குறிப்பிட்டு இருந்தார். மேலும் மருத்துவமனையில் செக்கப்பில் உள்ள போட்டோ மற்றும் சிங்கம், பெண் சிங்கம் தனது குட்டியுடன் இருக்கும் போட்டோவையும் ஷேர் செய்திருந்தார். இவருக்கும் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இவர் இப்போது ஹாலிவுட் ஹார்ட் ஆஃப் ஸ்டோன் இன் லண்டன் படத்தில் நடித்து வருகிறார். அங்கு படப்பிடிப்பு தளத்திலிருந்து வெளியாகி உள்ள புகைப்படத்தில் ஆலியா தனது பேபி பம்ப் காட்டுவது போன்ற படங்கள் இடம்பெற்றன.

அந்த போட்டோவில் ஆலியாவின் கர்ப்பான வயிறு அழகாக தெரிகிறது.மேலும், ஆலியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார். அதில், படத்தின் நடிகர்கள் மற்றும் குழுவினருக்கு நன்றி. படத்தொகுப்பில் இருந்து தொடர்ச்சியான படங்களைப் பகிர்ந்து வருகிறேன். கல்லின் இதயம் - என் முழு இதயமும் உங்களிடம் உள்ளது. அழகான gal_gadot… எனது இயக்குநர் டாம் ஹார்பர்… jamiedornan இன்று உங்களைத் தவறவிட்டார்… மேலும் மறக்க முடியாத அனுபவத்திற்காக ஒட்டுமொத்த குழுவிற்கும் நன்றி. உங்கள் அன்புக்கும் கவனிப்புக்கும் நன்றி என கூறியுள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement