• Apr 27 2024

பாக்கிய லட்சுமி சீரியல் ரசிகர்களுக்கு கிடைத்த ஷாக்கிங் நியூஸ்- கடும் குழப்பத்தில் ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய்டிவியில் ரசிகர்களைக் கவரும் விதமாக பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் இதில் ஹிட்டாக ஓடும் முக்கிய சீரியல் தான் பாக்கியலட்சுமி.

விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த சீரியலுக்கென்று தனி ரசகர் பட்டாளமே உள்ளது. அத்தோடு இந்த சீரியல் எந்த ஒரு அறிமுகமும் இல்லாத சில நடிகர்களை வைத்து ஆரம்பிக்கப்பட்டது.

ஆனால் இப்போது புதிய நடிகர்கள் என்று சொல்ல முடியாத அளவிற்கு மக்கள் மனதில் இந்த சீரியல் பிரபலங்களின் முகம் பதிந்துவிட்டது. அண்மையில் நடந்த விஜய் அவார்ட்ஸ் விருது விழாவில் இந்த தொடருக்கு ஏகப்பட்ட விருதுகள் கிடைத்தன.

அத்தோடு இந்த சீரியல் எப்போதும் TRPயில் டாப்பில் இருந்தது. சொல்லப்போனால் விஜய் தொலைக்காட்சி தாண்டி தமிழகத்தில் உள்ள டாப் சீரியல்கள் லிஸ்டில் முதல் மற்றும் இரண்டாவது இடத்தை பிடித்துவந்தது.

ஆனால் இப்போது சீரியலின் TRP சுத்தமாக குறைந்துவிட்டது. டாப் 5 லிஸ்டில் விஜய் டிவி சீரியல்களே இல்லையாம், டாப் 5ல் வந்துகொண்டிருந்த பாக்கியலட்சுமி 8.9 பெற்று TRPயில் பின்னால் உள்ளது. நன்றாக தானே ஓடிக் கொண்டிருக்கிறது, TRPயில் எப்படி குறைந்தது என்று ரசிகர்கள் கூறி வருவதையும் காணலாம்.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement