• Jan 19 2025

5 நிமிடங்களில் என்ன ஆகிவிட போகிறது.. அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து பிரபல சீரியல் நடிகை..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

ஐந்து நிமிடங்களில் என்ன ஆகிவிடப் போகிறது என்று அட்ஜஸ்ட்மென்ட் குறித்து சீரியல் நடிகை கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திரை உலகை பொருத்தவரை நடிகைகள் சந்திக்கும் பெரும் பிரச்சனை அட்ஜஸ்ட்மெண்ட் தான் என்பதும் அட்ஜஸ்ட்மெண்ட் இருந்தால் மட்டுமே தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் ஹீரோவின் ஆதரவை பெற முடியும் என்றும் அட்ஜஸ்ட்மென்ட் இல்லாதவர்கள் திறமையாளர்களாக இருந்தால் கூட அவர்கள் திறமை மதிக்கப்படாது என்றும் கூறப்பட்டு வருகிறது.

பிரபல நடிகைகள் முதல் அறிமுக நடிகைகள் வரை பலரும் இந்த அட்ஜஸ்மென்ட் குறித்து தங்களது கருத்துக்களை தெரிவித்த நிலையில் பிரபல திரைப்படம் மற்றும் சீரியல் நடிகை யாழினி சமீபத்தில் அளித்த பேட்டியில் அட்ஜஸ்ட்மெண்ட் குறித்து கூறியுள்ளார்.

ஐந்து நிமிடம் தானே அட்ஜஸ்ட்மென்ட் செய்தால் உங்கள் சினிமா வளர்ச்சி அபரீதமாக இருக்கும் என்று கூறி ஆசை வார்த்தை காட்டுவார்கள் என்றும், என்னிடம் கூட அட்ஜஸ்ட்மென்ட் குறித்து கேட்டார்கள் என்றும், ஆனால் நான் முடியாது என்று சொல்லிவிட்டேன் என்றும் யாழினி தெரிவித்தார்.

பொதுவாக தயாரிப்பாளர், இயக்குனர், கேமராமேன், ஹீரோ ஆகியோர்கள் தான் அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றி பேசுவார்கள் என்றும் அட்ஜஸ்ட்மென்ட் காரணமாகத்தான் சினிமா ஆசையோடு வரும் பல பெண்கள் தெறித்து ஓடி விடுகிறார்கள் என்றும் அவர் தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement