• May 04 2024

இளவரசி லைவ் லொகேஷன் அனுப்புங்க; திரிஷாவை கிண்டலடித்த கார்த்தி

Prema / 1 year ago

Advertisement

Listen News!

வித்தியாசமான கதைகளை உருவாக்கி அதனை உலகிற்கு படமாகக் கொடுப்பதில் கை தேர்ந்தவர் இயக்குநர் மணிரத்னம். இவரின் பல ஆண்டு கனவான வரலாற்று சிறப்பு மிக்க காவியங்களில் ஒன்றாகிய பொன்னியின் செல்வன் கதையை, தற்போது திரைப்படமாக உருவாக்கி இருக்கிறார். இந்தப் படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யாராய் எனப் பெரிய நடிகர் பட்டாளமே நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30-இல் வெளியாக உள்ளது.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெற உள்ள நிலையில் தற்போது லைகா நிறுவனம் அனைத்து கதாபாத்திரத்தின் போஸ்டர்களையும் வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வரிசையில் படத்தில் குந்தவையாக நடிக்கும் திரிஷாவின் லுக்கை இப்போது படக்குழு அறிவித்துள்ளது.

இது சம்பந்தமான ட்வீட்டை பகிர்ந்துள்ள நடிகர் கார்த்தி "இளவரசி லைவ் லொகேஷன் அனுப்புங்க, உங்க அண்ணனின் ஓலையை கொடுக்கணும்." என ஜாலியாக டுவிட் செய்துள்ளார்.

இந்த நாவலில் வந்தியத்தேவன் கதாபாத்திரம் ஆதித்த கரிகாலனின் ஓலையை குந்தவையிடம் கொடுக்க வருவதுதான் தொடக்கமாக இருக்கும். அதை குறிப்பிட்டு நடிகர் கார்த்தி ட்வீட் செய்து இருப்பது ரசிகர்களை கவர்ந்துள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement