• May 04 2024

குடும்பத்துடன் விடுமுறையை கொண்டாடும் நம்ம தல; வைரலாகும் புகைப்படங்கள்

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். 'அமராவதி' திரைப்படத்தில் அறிமுகமாகி தொடர்ந்து 'காதல் கோட்டை , காதல் மன்னன், அமர்க்களம், தீனா' போன்ற படங்களில் காதல் ஹீரோவாகவும் 'அசல், பில்லா, மங்காத்தா' போன்ற படங்களில் ஆக்ஷன் ஹீரோவாகவும் தன்னுடைய நடிப்புத் திறமையை வெளிக்காட்டி தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையும் கொண்டுள்ளார்.

சிறந்த நடிகருக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருது, சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது, தமிழக அரசு எம்.ஜி.ஆர் திரைப்பட விருது போன்ற விருதுகளையும் பெற்றார். தொடர்ந்தும் பல படங்களில் நடித்த நம்ம தல அஜித் தற்போது AK 61 படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்புக்கள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

AK 61 படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்கப் போகிறார். இப்படத்திற்காக இவரிற்கு 105 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் அஜித் பல்வேறு இடங்களுக்கு தனது நண்பர்களுடன் ரைட் சென்றிருந்தார். அங்கு அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது. இந்நிலையில் அதனைத் தொடர்ந்து தனது குடும்பத்துடன் விடுமுறையையும் கொண்டாடி வருகின்றார் நம்ம தல.

அந்தவகையில் தல அஜித் தனது மனைவி, மகள் மற்றும் மகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி செம வைரல் ஆகியுள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement