• May 09 2024

நடிகை சமந்தாவின் முதல் சம்பளம் தெரியுமா? அப்பிடியே ஷாக் ஆகிடுவிங்க

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் தென்னிந்திய சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் பிரபலமாக திரையுலகில் கலக்கி வருகிறார். இவர் படம் நடித்தாலோ அல்லது விளம்பரங்கள், போட்டோ ஷூட் என எது செய்தாலும் ரசிகர்களிடம் வைரலாகி பெரும் வரவேற்பை பெற்று விடும் .

சமீபத்தில் இவர் நடித்த 'காத்து வாக்குல இரண்டு காதல்' திரைப்படம் ஆனது மாபெரும் வெற்றி அடைந்து வசூல் வேட்டை நடத்தி வந்த நிலையில், இப்போது இவர் தெலுங்கில் விஜய் தேவர் கொண்டாவுடன் இணைந்து 'குஷி' என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

மேலும் தமிழில் 'சகுந்தலம், யசோதா' ஆகிய படங்களின் உடைய படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் நடைபெற்று வருகின்றது. தற்போது நடிகை சமந்தா யாருமே எதிர்பார்க்காத வகையில் தன்னுடைய படங்களுக்கு ரூபா 3 முதல் 5 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார்.

இந்நிலையில் இன்று பல கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கி வரும் நடிகை சமந்தா முதன்முதலில் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி நடிகை சமந்தா முதன்முதலில் வாங்கிய சம்பளம் ரூபாய் 500 தானம். இந்த செய்தி தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

அடடே பார்த்தீங்களா 500 ரூபா சம்பளம் வாங்கினவங்க தான் இன்றைக்கு கோடிக்கணக்கில் சம்பாதிச்சிட்டு இருக்காங்க.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement