• May 04 2024

விஜய் படத்தில் முதலில் நடிக்க இருந்தது அஜித்தா? இந்த டுவிஸ்ட நாம எதிர்பார்க்கலயே

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல இயக்குநரான தரணியின் இயக்கத்திலும், விஜய்யின் நடிப்பிலும் 2004-ஆம் ஆண்டு வெளியான திரைப்படமே 'கில்லி'. இந்தப்படம் வெளியான காலத்திலிருந்து இவர் மக்கள் மத்தியில் பெரியளவிலான வரவேற்பை பெற்றிருந்தார். மேலும் இவருக்கு ஜோடியாக இந்தப்படத்தில் நடிகை த்ரிஷா நடித்திருந்தார்.

விஜய்யின் திரையுலக வாழ்க்கையில் பெரியளவிலான திருப்பு முனையை ஏற்படுத்திய ஒரு படமும் இதுதான். இப்படத்தில் விஜய், த்ரிஷா மட்டுமன்றி இப்படத்தில் நடித்த அனைவருமே மக்கள் மத்தியில் பெரியளவில் பிரபலமாகி இருந்தார்கள்.

இவ்வாறு இருக்கும் போது, இந்தப்படத்தில் ஆரம்பத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியிருந்தது விஜய் அல்ல அஜித் தான் என்று ஒரு தகவல் வெளியாகி இருக்கின்றது. அதாவது இப்படம் தெலுங்குப் படத்தின் ரீமேக் என்பதனால் அஜித் மறுத்து விட்டாராம். இதனைத் தொடர்ந்து இயக்குநர் தரணி இப்படத்தின் கதையை விஜய்யிடம் கூறி இருக்கின்றார். உடனே விஜய்யும் இதற்கு சம்மதித்ததாகக் கூறப்படுகின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement