• Jan 18 2025

பிக் பாஸ் வீட்டில் டம்மி பீஸான சத்யா.. கேமரா மேனுக்கே அந்த விஷயம் தெரிஞ்சு போச்சு..

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோ தான் பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் கொடுத்த அமோக வரவேற்பின் காரணமாக தற்போது எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகின்றது. இதனை தொகுத்து வழங்க விஜய் சேதுபதி களம் இறங்கியுள்ளார்.

இந்த சீசனின் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் என ஆரம்பிக்கப்பட்ட நிகழ்ச்சியில், ஒரு வீட்டை இரண்டாக பிரித்து ஆண்கள் அணிக்கும் பெண்கள் அணிக்கும் கொடுத்து இருந்தார்கள். வழமையாகவே பிக் பாஸ் நிகழ்ச்சி என்றால் ஒரு பரபரப்பாக காணப்படும். அத்துடன் ரசிகர்களும் மிகுந்த ஆர்வத்துடன் இதை பார்த்து வருவார்கள்.

ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் பலரும் வெறுக்கத்தக்க ஒரு சீசனாக மாறி உள்ளது. அதற்கு காரணம் இந்த சீசனில் பங்கு பற்றிய போட்டியாளர்கள் சரியான கன்டென்ட் கொடுக்காதது தான். மேலும் இதில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் அதிகமானவர்கள் விஜய் டிவி பிரபலங்களாகவே காணப்படுகின்றார்கள்.

d_i_a

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக சென்ற போட்டியாளர்களும் ரசிகர்களை கவரும் வகையில் காணப்படவில்லை. இதனால் இந்த சீசன் மீதான எதிர்பார்ப்பு மிகவும் கம்மியானதாகவே காணப்படுகிறது. அது மட்டும் இன்றி மீம்ஸ் போட்டு கலாய்க்க கூட தகுதி இல்லாத சீசன் இது என இணையவாசிகள் தமது கருத்துக்களை முன் வைத்தார்கள்.


இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட சத்யா பற்றி சமூக வலைத்தள பக்கத்தில் தகவல் ஒன்று வைரலாகி வருகின்றது. அதாவது, சத்யா போல ஒரு டம்மி பாவா  போட்டியாளரை பார்க்கவே இல்லை. பிக் பாஸ் வீட்டில் இருக்காரா இல்ல அவங்க வீட்டுல இருக்காரா என்று தெரியவில்லை. லைவ்ல கூட சத்யாவை பார்க்க முடியல...

ஷோல கூட பார்க்க முடியல.. பிக் பாஸ்  கேமரா மேனுக்கே தெரிஞ்சு போச்சு.. இவரை போக்கஸ் பண்ணி எதுக்கு டைம் வேஸ்ட் பண்ணிக்கிட்டு என்று.. மீம்ஸ் போடுவதற்காக சத்யாவின் போட்டோவை வீடியோவில் தேடினால் அவருடைய போட்டோ கூட சிக்கவில்லை.. அந்த அளவுக்கு டம்மி பீஸ் ஆக சத்யா காணப்படுகின்றார் என்று தற்போது சத்யாவை பற்றிய விமர்சனங்கள் குவிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement