• May 20 2024

நடிகர் ரஜினியை நேரில் சென்று சந்தித்த ஏ.வி.எம் நிறுவனத்தின் தலைவர் சரவணன்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் தான் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கடந்த 2007- ஆம் ஆண்டு வெளியாகியிருந்த திரைப்படம் தான் 'சிவாஜி'. இப்படத்தை இயக்குநர் ஷங்கர் இயக்கியிருந்ததோடு 'ஏவிஎம் ப்ரொடக்ஷன்ஸ்' இப்படத்தை தயாரித்து இருந்தனர்.

இப்படத்தில் மறைந்த நடிகர்கள் விவேக், ரகுவரன், மணிவண்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கதாநாயகியாக ஸ்ரேயா சரண் நடித்திருந்தார். இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

இப்படம் வெளியாகி 150 கோடிக்கு மேல் வசூலிலும் அள்ளிக் குவித்தது. அத்தோடு இப்படம் வெளியாகி 15ஆண்டுகள் கடந்து விட்டதால் இயக்குநர் ஷங்கர் மற்றும் அவரின் மகள் இருவரும் ரஜினியை நேரில் சென்று சந்தித்தனர்.

இதனால் ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இப்படத்தைத் தயாரித்த ஏவிஎம் நிறுவனத்தின் தலைவர் சரவணன், அவரது மகன் குகன், மற்றும் பேத்தி அருணா குகன் ஆகியோர் இன்று நடிகர் ரஜினிகாந்த்தை நேரில் சென்று சந்தித்துள்ளனர்.

மேலும் இந்த சந்திப்பில் சிவாஜி படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து ரஜினிக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement