• May 18 2024

சமந்தாவின் யசோதா படத்தின் அட்டகாசமான கிளிம்ஸ் வீடியோ ரிலீஸ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் தனது இயல்பான நடிப்பினால் முன்னேறிய பல நடிகை தான் சமந்தா. தமிழில் இவர் நடிப்பில் இறுதியாக வெளியாகிய காத்துவாக்கில ரெண்டு காதல் திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்று வருவதோடு விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

இதனைத் தொடர்ந்து தமிழ் ,தெலுங்கு ,மலையாளம் ,கன்னடம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் உருவாகி வரும் சமந்தாவின் புதிய திரைப்படம் யசோதா. இந்த படத்தில் சமந்தாவுடன் வரலட்சுமி முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் . இந்த படத்தை கிருஷ்ண பிரசாத் என்பவர் இயக்கி வருகிறார்.

அத்தோடு இப்படத்திற்கு மணிசர்மா இசையமைப்பதால் படத்தின் மீது எதிர்பார்பானது ரசிகர்களிடையே அதிகரித்தும் காணப்படுகின்றது. இந்நிலையில் இந்த படம் ஆகஸ்ட் 12 ஆம் தேதி இந்தியா முழுவதும் வெளியாகும் என தற்போது படக்குழு அறிவித்துள்ளது.

இதையடுத்து இன்று இந்த படத்தின் அட்டகாசமான கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்று வெளியாகி இணையத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.இதனை ரசிகர்கள் கண்டு களித்தும் வருகின்றனர்.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement