• May 18 2024

36 வருட தவம்,எனக்குள் இருக்கும் இயக்குநரை பாராட்டிய கமல்- மகிழ்ச்சிப் பதிவைப் போட்ட லோகேஷ் கனகராஜ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத மாஸ் நடிகராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவர் நடிப்பில் தற்பொழுது உருவாகி வரும் திரைப்படம் தான் விக்ரம். இப்படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகின்றார். அத்துடன் இப்படத்தில் விஜய் சேதுபதி பகத் பாசில் உள்பட பலர் நடித்திருக்கின்றனர்.

இந்த படம் வரும் ஜுன் மாதம் 3 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்துக்கும் அனிரூத் இசையமைத்துள்ளார். கமல் நடிப்பில் நான்காண்டுகளுக்குப் பிறகு ரிலீஸ் ஆகும் திரைப்படம் என்பதால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துக் காணப்படுகின்றது.

இப்படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் ரிலீஸ் செய்ய உள்ளது. மலையாள உரிமையை சிபு தமீம்ஸ் கைப்பற்றியுள்ளார். இந்நிலையில் இப்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் டிவிட்டரில் கமலுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, அதில் “36 வருட தவம்! எனக்குள் இருக்கும் இயக்குநரை என் உலகநாயகன் கமல்ஹாசன் பாராட்ட!” என நெகிழ்ச்சியாகக் கூறியுள்ளார்.

இதன் மூலம் கமல், விக்ரம் படத்தைப் பார்த்து பாராட்டியுள்ளார் என்று ரசிகர்கள் கருதி, லோகேஷுக்கு வாழ்த்து மழைப் பொழிந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement