• Jan 19 2025

இவருக்கா உடம்பு சரியில்லை.. வேற லெவல் ஆக்சன்.. சமந்தாவின் ‘சிட்டாடல்’ டீசர் ரிலீஸ்..

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

சமந்தா நடித்த ‘சிட்டாடல்’ என்ற வெப் தொடர் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று திறந்த நிலையில் இந்த தொடரின் டீசர் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

சுமார் ஒன்றரை நிமிடங்கள் உள்ள இந்த டீசரில் சமந்தா மற்றும் வருண் தவானின் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் உள்ளன என்பதும் குறிப்பாக சமந்தாவின் ஆக்ஷன் காட்சிகளை பார்க்கும்போது இவரா உடல்நலமின்றி சிகிச்சை பெற்று வந்தவர் என்று ஆச்சரியப்படும் வகையில் அவரது ஆக்ஷன் காட்சிகள் இருப்பதாகவும் கமெண்ட்கள் பதிவாகி வருகிறது.

ஆனால் அதே நேரத்தில் ஹாலிவுட்டில் வெளியான பிரியங்கா சோப்ராவின் ‘சிட்டாடல்’ கதைக்கும் இந்த கதைக்கும் சம்பந்தமில்லை என்பது போல் இந்த டீசரில் தெரிந்தாலும் முழு தொடர் வெளியான பின்னர் தான் அது உறுதி செய்யப்படும். நவம்பர் 7ஆம் தேதி முதல் அமேசான் பிரைம் வீடியோவில் இந்த வெப் தொடர் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 வருண் தவான், சமந்தா, சிம்ரன், சிக்கந்தர் உள்பட பலர் நடிப்பில் உருவாகிய இந்த வெப் தொடரை ராஜ் அண்ட் டிகே இயக்கி உள்ளனர். இவர்கள் ஏற்கனவே சமந்தா நடித்த ’தி பேமிலி மேன்’ என்ற தொடரை இயக்கியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நீண்ட இடைவெளிக்கு பின் சமந்தா மீண்டும் ரீஎன்ட்ரி  ஆகி உள்ள இந்த வெப்தொடர் ரசிகர்கள் மத்தியில் எந்த அளவிற்கு வரவேற்பை பெறுகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.  


Advertisement

Advertisement