• May 19 2024

நண்பர்களுடன் ஜாலியாக ஊர் சுற்றும் சமந்தா- மோனிங் வைப்ஸ் என வெளியிட்ட லேட்டஸ்ட் கிளிக்ஸ்

stella / 9 months ago

Advertisement

Listen News!

கோலிவுட்டில் பிரபலமான நடிகை சமந்தா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பசங்களில் நடித்துள்ளார். இவர் சென்னை பல்லாவரத்தை சேர்ந்தவர். இவர் ஹோலி ஏஞ்சல்ஸ் பள்ளியில் படித்துள்ளார். மேலும் இவர் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் படித்துள்ளார். 


2010 ஆம் ஆண்டு விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். சூர்யா, விஜய், அதர்வா, நானி, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உள்ளிட்டோருடன் நடித்துள்ளார்.


இவர் நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து கடந்த 2017 ஆம் ஆண்டு கோவாவில் திருமணம் செய்து கொண்டார். 2021 ஆம் ஆண்டு இருவரும் கருத்து வேறுபாட்டால் பிரிவதாக கூட்டாக அறிவித்தனர்.


 இதையடுத்து தொடர்ந்து கெரியரில் கவனம் செலுத்தி வந்த சமந்தா அண்மையில் தனக்கு மயோசிடிஸ் என்னும் நோய் ஏற்பட்டுள்ளதாகவும் அதிலிருந்து தற்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக விடுதலை பெற்றும் வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.


இருப்பினும் நோயிலிருந்து முழுமையாக விடுதலை பெற சினிமாவிற்கு சில காலம் பிரேக் எடுத்துள்ளார்.சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் அவ்வவ்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோவையும் பதிவிட்டு வருவார். அந்த வகையில் தற்பொழுது சுற்றுலா சென்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement