பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, பாண்டியன் சரவணனைப் பார்த்து உன்ர வாழ்க்கையை நான் கெடுக்கல என்கிறார். மேலும், உங்க ரெண்டு பேருக்கும் என்ன செய்யணும் என்று எனக்குத் தெரியும் என்கிறார். அதனை அடுத்து பாண்டியன் கடையில வாங்கிக் கொண்டு வந்து அரசிக்கும் சரவணனுக்கும் சாப்பாட்டைக் கொடுத்திட்டு தானும் சாப்பிடுறார். மறுபக்கம் செந்தில் கதிரைப் பார்த்து நீ என்னடா பணத்தைக் கொடுக்கிறேன் என்று சொல்லிட்ட என்று கேட்கிறார்.
மேலும் 10 லட்சம் ரூபாடா கொஞ்ச காசா என்கிறார் செந்தில். பின் மீனா மாமா கோபத்தில் தான் இப்படி எல்லாம் செய்திட்டு இருக்கிறார் நான் வேணும் என்றால் போய் பேசி பார்க்கவா என்று ராஜி கிட்ட கேட்கிறார். அதனை அடுத்து பாண்டியன் மீனாவையும் தான் கொண்டுவந்த சாப்பாட்டை சாப்பிட சொல்லுறார். அதைக் கேட்ட கோமதி ஷாக் ஆகுறார்.

பின் செந்தில் மீனாவைப் பார்த்து அப்பா என்னட காசைக் கொண்டு வந்து தரச்சொல்லி இருக்கிறார் நீ கொஞ்சமும் வெட்கமில்லாமல் அவர் கூட போய் சாப்பிடுற என்று சொல்லிப் பேசுறார். அதைக் கேட்ட கோமதியும் மீனாவைப் பேசிக் கொண்டிருக்கிறார். பின் மீனா நான் வேணாம் என்று சொல்லணும் என்று தான் நினைச்சன்.. ஆனா, பரோட்டாவைப் பார்த்தவுடனே சொல்ல மனசு வரல என்கிறார்.
அதைத் தொடர்ந்து காந்திமதி கோமதி கிட்ட பாண்டியன் உன்ர அண்ணனுங்களை விட மோசமா இருக்கிறாரே என்று சொல்லுறார். அதைக் கேட்ட கோமதி ரொம்ப அப்பட்டமா பேசாத, உன்ர பசங்களை விட அவர் ஒன்னும் மோசமானவர் இல்ல என்று சொல்லுறார். மறுநாள் காலையில சக்திவேல் காந்திமதியை வம்பிக்கு இழுத்துக் கொண்டிருக்கிறார். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!