• Oct 22 2025

பாண்டியன் மீது கோபத்தில் கத்தும் சக்திவேல்.. எரியுற விளக்கில் எண்ணையை ஊற்றும் சுகன்யா.!

subiththira / 7 hours ago

Advertisement

Listen News!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, கோயிலில குமார் பேனர் வைச்சிருக்கிறதைப் பார்த்த பாட்டி சந்தோசப்படுறார். மேலும் அவர் காலம் போன காலத்தில எதுக்கு இதெல்லாம் என்கிறார். இதனை அடுத்து அதே இடத்தில பாண்டியனோட பேனர் வைக்கிறதைப் பார்த்த சக்திவேல் கோபப்படுறார். பின் சக்திவேல் அந்த பேனரை கிழிச்சு எறிய சொல்லுறார்.


அதைக் கேட்ட பாட்டி சக்திவேலைப் பார்த்து சண்டை போட வேணாம் என்றெல்லோ சொன்னேன் பிறகு ஏன் இப்புடி கத்துற என்று கேட்க்கிறார். மேலும் சண்டை போடத்தான் போறீங்க என்றால் வேளைக்கே சொல்லுங்க நான் வீட்ட போறேன் என்கிறார் பாட்டி. அதனை அடுத்து பாட்டி தன்ர கணவரை நினைத்து அழுதுகொண்டிருக்கிறார்.

மறுபக்கம் பாண்டியன் குடும்பத்தோட கோயிலுக்கு வந்து நிக்கிறார். பின் கோமதி செந்திலைப் பார்த்து சண்டை எதுவும் செய்யவேணாம் என்கிறார். அதனை அடுத்து கதிர் என்ன பரிசு கொடுக்கப்போற என்று மீனா கேட்டுக் கொண்டிருக்கிறார். அதுக்கு கதிர் அதெல்லாம் சர்ப்பிரைஸ் என்கிறார்.


பின் கதிர் மேளகாரரை கூட்டிக்கொண்டு வந்து மரியாதையோட வீட்டுக்காரர் எல்லாரையும் அழைச்சுக் கொண்டு கோயிலுக்குள்ளே போறார். அதைப் பார்த்த சுகன்யா அப்ப ஒரு சண்டை இருக்கு என்கிறார். இதுதான் இன்றைய எபிசொட். 

Advertisement

Advertisement