உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கவர்ந்துள்ள, Netflix நிறுவனத்தில் புகழ்பெற்ற இணையத் தொடரான Stranger Things, அதன் 5வது மற்றும் கடைசி சீசனுடன் ரசிகர்களுக்கு விருந்தளிக்க தயாராகி வருகிறது. இத்தொடரின் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இறுதி எபிசொட், வருகின்ற டிசம்பர் 31ம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த கடைசி எபிசொட்டை Netflix தளத்தில் மட்டுமின்றி, திரையரங்குகளில் வெளியிடவும் தயாரிப்பாளர்கள் தீவிரமாக திட்டமிட்டு வருகின்றனர் என்ற தகவல் வெளியாகி, ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
வழக்கமாக, இணையத் தொடர்கள் OTT தளங்களில் மட்டுமே வெளியாகின்றன. ஆனால் Stranger Things என்பது சாதாரண இணையத் தொடராக இல்லாமல், ஒவ்வொரு சீசனும் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான, சினிமா தரத்தில் உருவாக்கப்பட்ட ஒரு மெகா தொடர்.
இத்தொடரின் இறுதிக்கட்டம் மிக முக்கியமானதாக இருப்பதால், ரசிகர்கள் அதை பெரிய திரையில் அனுபவிக்க விரும்புகிறார்கள். அந்தக் கோரிக்கையை உணர்ந்ததால் தான் தயாரிப்பாளர்கள் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளனர்.
இறுதி எபிசொட்டின் நீளம் 2 மணி நேரத்திற்கும் மேலாக இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன், டிசம்பர் 31ம் தேதி Netflix தளத்திலும், அதே நாளில் திரையரங்கிலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Listen News!