• May 20 2024

கள்ள பாஸ்போர்ட்டில் வெளிநாடு கிளம்பும் ரோகிணி? பேயாட்டம் ஆடிய விஜயா! பிரவுன் மணி கிரேட் எஸ்கேப்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட் வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என பார்ப்போம்.

அதில், ரோகிணியின் பிரச்சனைகளை கேட்ட வித்யா, நீ பேசாம வேற பெயர்ல பாஸ்போர்ட் எடுத்துட்டு வேற நாட்டுக்கு போயிடு. அதுதான் உனக்கு நல்லம் என சொல்ல, அது எப்படி நான் இந்த லைப்புக்காக தானே கஷ்டப்பட்டேன். நான் வேற ஐடியா வச்சு இருக்கன். நீ  பிரவுன் மணியை கூப்பிடு. நான் அவருக்கு பிளான் சொல்லுறேன் என சொல்லுகிறார்.

ரோகிணி சொன்ன திட்டத்தின்படியே பிரவுன் மணி, விஜயா வீட்டுக்கு கிளம்புகிறார். இதன்போது போன முறையை விட இந்த முறை நடிப்பில் பின்னனும் என சொல்லிக் கொண்டே செல்கிறார்.

விஜயா வீட்டுக்கு வந்த அவர், யாரும் இல்லாத காரணத்தால் தனக்குத் தானே ஆக்ஷன் சொல்லிவிட்டு நடிக்க ஆரம்பிக்கிறார். அங்கு எல்லோரும் வந்தவுடன் பரபரப்பாக கதவு, ஜன்னல்   எல்லாவற்றையும் பூட்டுமாறும், எல்லாருடைய ஃபோனையும் வாங்கி ஒரு பாத்திரத்தில் போட்டு சுவிட்ச் ஆஃப் பண்ணி அதை ஒரு பாத்திரத்தில் போட்டு வைத்து விடுகிறார். இவ்வாறு அவர் பரபரப்பாக வந்து எல்லாரையும் இருக்க வைத்து விஷயத்தை சொல்லுகிறார்.


அதாவது ரோகிணி அப்பாவின் பாட்னர்ஸ் அவரை ஏமாத்திட்டாங்க. அதனாலதான் ரோகினிட ஃபங்ஷனுக்கு வர முடியல அவர் ஏர்போர்ட்டுக்கு வரும்போது அவரை போலீஸ் புடிச்சிட்டு போயிட்டு. இப்போ அவர் மலேசியா ஜெயிலில் தான் இருக்கிறார் என சொல்லி அழுகிறார்.

இதைக்கேட்டு ரோகிணி அழுது கொண்டே என்ன அங்கிள்  சொல்லுறீங்க எனக் கேட்க, சொல்லிவிட்டத தானே சொல்லுகிறேன் என சொல்ல, என்ன சொல்லிவிட்டத சொல்றீங்களா என மீனா கேட்கிறார். அதற்கு ரோகினிட அப்பா சொல்லிவிட்டத தான் சொல்கிறேன் என சமாளிக்கிறார் பிரவுன் மணி.

நானும் எங்கயாவது போய் தலைமறைவாக போவதாகவும் சொல்லிவிட்டு விஜயா குடும்பத்தை சமாளித்து, நைசாக கிளம்புகிறார் மணி. இதையடுத்து ரோகிணி அண்ணாமலையிடம் அப்பாவை நினைத்து அழுதுவிட்டு ரூமுக்கு சென்று சிரிக்கிறார்.

இதன் போது அங்கு மனோஜ் , விஜயா வர மீண்டும் அழுது நடிக்கிறார். விஜயா நான் கூட ஆரம்பத்தில் கோபப்பட்டேன். ஆனா உங்க அப்பாட சிட்டுவேஷன் இப்போ தான் புரிது என சொல்ல, அவரை கட்டிப்பிடித்து அழுது நடிக்கிறார்.  

மறுப்பக்கம் முத்து, இதை பார்க்க எனக்கு சந்தேகமா இருக்குது. ஆரம்பத்துல அவங்கட அப்பா ஏர்போர்ட் வந்துட்டாரு என்று தான் ரோகிணி சொன்னா, ஆனால் இப்பொழுது வரவில்லை என்று அவங்க மாமா சொல்றாங்க. இதுல ஏதோ இருக்குது என முத்து சொல்ல, அவங்களே பாவம் அப்பாவ நினைச்சு கஷ்டப்படுறாங்க என்று மீனா சொல்லிவிட்டு போகிறார்.

இதை தொடர்ந்து விஜயா அங்கும் இங்கும் குறுக்காக நடந்து கொண்டிருக்க மீனாக் போய் காபி கொடுக்கிறார். அதனை தட்டி விட்டு வீட்டுக்கு வர வேண்டிய மகாலட்சுமி வரல, வந்த குபேரனும் ஜெயிலுக்கு போயிட்டான். ஆனால் இல்லாத தண்டம் எல்லாம் வீட்டில திரிது  என மீனாவை குத்தி காட்டி பேசுகிறார். 

அதற்கு மீனா நீங்க என்ன தானே சுட்டிக்காட்டி பேசுறீங்கன்னு சொல்ல, ஆமா உன்னைத்தான் குத்தி காட்டி பேசுறேன். நீங்க அந்த பங்க்ஷனுக்கு வந்ததால தான் இவ்வளவு பிரச்சனையும். இப்ப  மகாலட்சுமி ஸ்ருதி வீட்டுக்கு வரல. குபேரனும் இல்ல என திட்டி தீர்க்கிறார் விஜயா.

அதற்கு அண்ணாமலை,  என்ன நடந்தாலும் நீ எவ்வளவு திட்டினாலும் இந்த வீட்டு கௌரவத்தை காப்பாற்றுவது மீனாதான். அவதான் இந்த வீட்டு மகாலட்சுமி அப்படி என்று சொல்லுகிறார் அண்ணாமலை. இதுதான் இன்றைய எபிசோடு.

Advertisement

Advertisement