• Jun 29 2026

விஜயாவுக்கு செம ட்விஸ்ட் கொடுத்த ரோகிணி.. அருணின் அட்டூழியத்தை கண்ட பாட்டி

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், சத்யாவின் திருமண ஏற்பாட்டை பாட்டி வீட்டில் வைத்து நடத்தப் போவதாக முத்து அண்ணாமலையிடம் கூறிக் கொண்டிருக்கிறார். மேலும், எல்லோரும் வந்தால் நன்றாக இருக்கும் என்று விஜயாவைப் பார்த்து சொல்ல, அவரும் "இது நம்ம மீனா வீட்டுக் கல்யாணம். நான் கண்டிப்பாக வருவேன்" என்று கூறுகிறார். இதனால் அனைவரும் சந்தோஷப்படுகிறார்கள்.

ஆனால், இந்தக் கல்யாணத்திற்குச் சென்று சிந்தாமணியை அவமானப்படுத்த வேண்டும் என்று விஜயா திட்டம் போடுகிறார். அந்த நேரத்தில் அங்கு வந்த மனோஜ், சந்தோஷ் கூறியதாக கனகா பற்றி தெரிவிக்கிறார். மேலும், அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், அவரை திருமணம் செய்தால் கோடிக்கணக்கில் சொத்து கிடைக்கும் என்றும் கூற, விஜயா கோபப்படுகிறார்.

இதைத்தொடர்ந்து பாட்டி வீட்டிற்கு திடீரென அருண் செல்கிறார். அங்கு குலதெய்வக் கோயிலுக்குச் செல்வதாக கூறிவிட்டு, இங்கு எதற்காக வந்தாய்? வீட்டுக்கு போகலாம் என்று சீதாவை அழைக்கிறார். அத்துடன் சீதாவின் கைகளைப் பிடித்து முறுக்குகிறார். இதனை பாட்டியும் பார்த்துவிடுகிறார். அதன்பிறகு ஒரு வழியாக அங்கிருந்து சென்றுவிடுகிறார்.


அந்த நேரத்தில் பாட்டி, இப்படித்தான் உன்னை வீட்டில் வைத்து நடத்துகிறானா? உன்னுடைய மரியாதையை நீதான் காப்பாற்ற வேண்டும் என்று சீதாவுக்கு அறிவுரை கூறுகிறார்.

இன்னொரு பக்கம், பார்வதி வீட்டிற்கு விஜயா செல்கிறார். அங்கு ரோகிணி இருப்பதை பார்த்து கடும் கோபத்தில் கத்துகிறார். ஆனாலும், விஜயாவிடம் பேசிய ரோகிணி, தான் விவாகரத்து கொடுப்பதற்கு சம்மதிப்பதாக தெரிவிக்கிறார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement