• Nov 25 2024

சமகால அவலங்களை சுட்டிக்காட்டிய பராரி படத்திற்கு வெண்கல விருது! விபரம் இதோ

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் குக்கூ, ஜோக்கர், ஜப்பான், ஜிப்சி போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ராஜூ முருகன், எஸ்பி சினிமா நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கிய படம் தான் பராரி. இந்த படம் வெளியாகி கிட்டத்தட்ட ஒருவருடம் ஆகவுள்ளது.

பராரி என்பது தங்களுடைய சொந்த இடத்தில் இருந்து பல்வேறு இடங்களுக்கு தங்களது வாழ்க்கைக்காக போகும் மக்களை  எடுத்துக்காட்டுவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

திருவண்ணாமலையை சுற்றி உள்ள அந்த நிலத்தின் எளிய மக்களின் வாழ்க்கை முறையையும், அவர்களுக்கான அரசியலையும் பற்றி தான் பராரி திரைப்படம் பேசி உள்ளது.


இதில் சாதி, மொழி, மதத்தை வைத்து சமூகத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும் சமகால அவலங்களையும் இந்த படம் எடுத்துக்காட்டி உள்ளது. இந்த படத்தில் தோழன் வெங்கடேசன் படப்புகழ் ஹரிசங்கர் கதாநாயகனாகவும், புதுமுகம் சங்கீதா கல்யாண் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது இயக்குனர் ராஜூ முருகன் தயாரிப்பில் உருவான பராரி படத்திற்கு 57ஆவது World fest houston remi award 2004 இல் சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான வெண்கல விருதை வென்றுள்ளது. தற்போது இந்த தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement