பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 ஜனவரி 19ஆம் தேதி உடன் நிறைவுக்கு வந்தது. அக்டோபர் ஆறாம் தேதி ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி 100 நாட்களைக் கடந்து சுமார் 106 நாட்கள் வரை ஒளிபரப்பானது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக முத்துக்குமரன் அறிவிக்கப்பட்டார்.
பிக்பாஸ் சீசன் எட்டில் போட்டியாளராக கலந்து கொண்டவர்களில் ஒருவராக சீரியல் நடிகரான அர்னவ் காணப்படுகின்றார். இவர் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழையும் போது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. அதற்கு காரணம் சக போட்டியாளராக காணப்பட்ட அன்ஷிதா இவருடைய காதலியாக காணப்பட்டது தான்.
நடிகர் அர்னவ் ஏற்கனவே செல்லமா சீரியல் நடிகை திவ்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவருக்கு பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. ஆனாலும் அவரைப் பிரிந்து அதன் பின்பு அன்ஷிதாவுடன் ரிலேஷன்ஷிப்பில் காணப்பட்டார்.
இவர்கள் இருவரும் பிக்பாஸில் நுழைந்த போது திவ்யா வெளியிட்ட ஆடியோ ஒன்று கடும் வைரலானது. அதில் அன்ஷிதா அர்னவை லவ் பண்ணுவதாகவும், உன்னால் என்ன செய்ய முடியும் என விசாண்டாவாதமாக பேசிய ஆடியோ பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. அதன் பின்பு ஒரு கட்டத்தில் பிக்பாஸ் வீட்டில் வைத்தே அர்னவுக்கும் அன்ஷிதாவுக்கும் மனமுறிவு ஏற்பட்டது.
இறுதியில் பிக்பாஸ் பைனல் மேடையில் பேசிய அன்ஷிதா, தான் வெளியே சென்ற போது முதல் வேலையாக தனது காதலனை சந்தித்து தனது காதல் உறவை முறித்துக் கொண்டதாக பேசினார். அப்போது அவர் வேறு பெண்ணுடன் மகிழ்ச்சியாக இருந்ததாகவும் பேசி இருந்தார்.
இந்த நிலையில், பிக்பாஸில் இருந்து வெளியேறிய அர்னவ் வழங்கிய பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது.
அதில் அன்ஷிதா போனில் திட்டியது உண்மை தானா என கேள்வி எழுப்ப, நோர்மலா சூட்டிங் டைம்ல நாங்க சிரிச்சு பேசுவோம். அவ அந்த மாதிரி கேரக்டர் இருக்கிற பொண்ணு.. நாங்க என்ன தப்பு பண்ண போறோம்..
சூட்டிங்க் டைம்ல எங்களை சுற்றி சுமார் 50 பேர் கிட்ட இருப்பாங்க. எத்தின பேர் கண்ணு எங்க மேல இருக்கும் அதுல.. நாங்க என்ன தப்பு பண்ண போறோம். அவள என் மடில உட்கார வச்சு கிஸ் பண்ண போறேனா? இல்ல அவள் என்னை கட்டி பிடிக்க போறாளா? என கோபத்துடன் பேசியுள்ளார் அர்னவ்.
Listen News!