• Jan 18 2025

ராஷ்மிகா, ஆலியா பட் அடுத்ததாக ஆபாச Deep Fake வீடியோவில் மாட்டிய பிக் பாஸ் பிரபலம்... போலீசில் புகார்...

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

சமீப காலமாக பல்வேறு நடிகைகள் Deepfake வீடியோக்கள் மூலமாக பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். ராஷ்மிகா, ஆலியா பட் உள்ளிட்ட பல நடிகைகளின் மோசமான வீடியோக்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் பிக் பாஸ் பிரபலம் ஒருவரும் இதனால் பாதிக்கபட்டுள்ளார். 


சமூக காலமாக இணையத்தில் நடிகைகளின் முகத்தை வேறொரு பெண்ணின் உடல் உடன் இருப்பது போல வீடியோ எடிட் செய்து அதனை வைரல் செய்து வந்தனர். அதில் நடிகை ரஷ்மிக மற்றும் ஆலியா பட் ஆகியோர் சிக்கி இருந்தனர். இந்நிலையில் பலரும் அதற்கு எதிர்பு தெரிவித்த நிலையில் வீடியோவெளியிட்ட குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க பட்டது.


மேலும் இவ்வாறு மீண்டும் விடியோக்கள் வெளியிடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அரசும் எச்சரித்து வருகிறது. இந்நிலையில் பிக் பாஸ் புகழ் நடிகை சனம் ஷெட்டி தன்னை ஒரு நபர் deepfake வீடியோ வெளியிடுவேன் என மிரட்டுவதாக தெரிவித்து இருக்கிறார். அந்த ட்விட்டை குறிப்பிட்டு தமிழ்நாடு போலீசில் சனம் ஷெட்டி புகார் கொடுத்திருக்கிறார். இந்நிலையில் அது தொடர்பாக போலீசார் நடவடிக்கி எடுப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

Advertisement

Advertisement