பாலிவுட்டின் முன்னணி நடிகர் ரன்வீர் சிங் தற்போது சமூக வலைத்தளங்களில் மற்றும் செய்தியாளர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அண்மையில் கோவாவில் நடந்த சர்வதேச இந்திய திரைப்பட (IFFI) விழாவில் ரன்வீர் மேடையில் செய்த நடிப்பு மற்றும் காமெடியான முகபாவங்கள் இணையத்தில் பரவிய வீடியோவின் மூலம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

IFFI விழாவில், ரன்வீர் சிங் மேடையில் ரிஷப் ஷெட்டியின் “காந்தாரா 2” படத்தின் காட்சிகளைப் பற்றி பேசியுள்ளார். அந்நிகழ்ச்சியில், ரன்வீர் கிண்டலடிக்கும் வகையில், சாமியாடிகள் எழுப்பும் ‘ஓ’ என்ற ஒளியை அவர் முகபாவத்துடன் நகைச்சுவையாக காட்டிய காட்சி இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிகழ்வில், காந்தாரா படத்தின் நடிகர் ரிஷப் செட்டி, பார்வையாளராக இருக்கையில் ரன்வீரின் செயல்பாட்டை கவனித்தார். மேலும், உலகளாவிய அளவில் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற ரஜினிகாந்த் கூட அந்த நிகழ்ச்சியை நேரில் பார்த்து இருந்தார்.

அந்நிகழ்ச்சியில் ரன்வீர் சிங், “நான் காந்தாரா சாப்டர் 1 ஐ திரையரங்குகளில் பார்த்தேன். ரிஷப் நன்றாக நடித்திருந்தார், குறிப்பாக பெண் ஆவி (சாமுண்டி தெய்வம்) உங்கள் உடலில் நுழையும் போது அந்த ஷாட் அற்புதமாக இருந்தது” என தனது பாராட்டை தெரிவித்துள்ளார். ஆனால், மேடையில் அவர் செய்த முகபாவம் மற்றும் கிண்டல் இணையத்தில் பரவிய பிறகு, சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சை கிளப்பியுள்ளது.

பலர் இந்த நடிப்பை தவறானது என்று விமர்சித்துள்ளனர். சமூக வலைத்தளங்களில் வீடியோ பரவிய பிறகு, ரன்வீரை மன்னிப்பு கேட்குமாறு பிரச்சாரங்கள் தொடங்கியுள்ளன. இந்த சம்பவம் தற்பொழுது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Ranveer's reaction to the Kantara scene really felt unnecessary and disrespectful
pic.twitter.com/VeJ3phEUBu
Listen News!