• May 13 2024

ரஜினியின் ஜெயிலர்.. முக்கிய லேட்டஸ் அப்டேட் கொடுத்த யோகி பாபு – எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!

Jo / 10 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. பல முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துவரும் இவர் ஒரு சில படங்களில் கதாநாயகனாகவும் அசத்தி வருகிறார். 

அந்த வகையில் தற்போது ஏராளமான படங்களை கைவசம் வைத்திருக்கும் இவர் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நடிகர் ரஜினியின் “ஜெயிலர்” திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் பல உச்ச நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கும் இப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் நிலையில் இப்படம் தொடர்பான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

அதன்படி இப்படம் தொடர்பான அப்டேட் களுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கும் சமயத்தில் சமீபத்திய பேட்டியில் நடிகர் யோகி பாபு கூறியுள்ள தகவல்கள் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.

அதில் அவர், ரஜினி சாரின் காம்பினேஷனில் இப்படம் ஒரு வித்தியாசமான படமாக இருக்கும். தர்பார் படத்தில் ரஜினி சாருடன் காமெடி காட்சிகள் குறைவாக இருக்கும். ஆனால் ஜெயிலரில் படம் முழுக்க காமெடி இருக்கும். ரஜினி சாரும் அந்த காமெடி காட்சிகளில் மிகவும் எதார்த்தமாக நடித்துள்ளார் எனக் கூறியுள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement