• Apr 28 2024

மூத்த மகனின் பிறந்த நாளைக் கோலாகலமாகக் கொண்டாடிய ஜெயம் ரவி- வெளியாகிய பேர்த்டே கிளிக்ஸ்

stella / 9 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில், முன்னணி நடிகராக இருக்கும் ஜெயம் ரவி, திரைப்படங்கள் நடிப்பதில் எவ்வளவு பிசியாக இருந்தாலும், தன்னுடைய மனைவிக்காகவும், மகன்களுக்காகவும் நேரம் ஒதுக்க மறவாதவர். 


 இவர் நடிப்பில்  இறுதியாக அகிலன்' மற்றும் 'பொன்னியின் செல்வன் 2' திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது.ஒரே மாதிரியான கதைகளை தேர்வு செய்து நடிக்காமல், தன்னுடைய ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசம் காட்டி வரும் ஜெயம் ரவி, பொன்னியின் செல்வன் படத்தில் ராஜ ராஜ சோழனாக நடித்தது, இவருக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பாகவே பார்க்கப்பட்டது. 


மேலும் அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்ற நேர்த்தியாக தன்னுடைய நடிப்பையும் வெளிப்படுத்தி இருந்தார்.ஜெயம் ரவி எந்த அளவிற்கு மிகவும் பிரபலமோ அதே அளவிற்கு அவரின் மனைவி ஆர்த்தியும் சமூக வலைத்தளத்தில் மிகவும் பிரபலமானவர். இவர் விதவிதமாக போட்டோ ஷூட் செய்து வெளியிடும் புகைப்படங்களை பார்ப்பதற்கு என்றே தனி ரசிகர்கள் கூட்டமும் உள்ளது.


இந்த நிலையில் ஜெயம் ரவி தன்னுடைய மூத்த மகனின் பிறந்தநாளை தன்னுடைய குடும்பத்துடன் இணைந்து கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளார்.இது குறித்த புகைப்படத்தை ஜெயம் ரவி தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படம் தற்பொழுது வைரலாகி வருவதையும் காணலாம்.



Advertisement

Advertisement

Advertisement