• Mar 09 2025

"உங்களால் இந்தியாவிற்கே பெருமை..! " இளையராஜாவுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து..

Mathumitha / 1 day ago

Advertisement

Listen News!

இளைய ராஜாவின் இசைக்கு மயங்காதவர்கள் யாரும் இல்லை இவர் தமிழ் சினிமாவிற்கே கிடைத்த ஒரு சொத்து 1976 களில் தனது இசைப்பணியினை தொடங்கி இன்றுவரை செய்து வருகின்றார். பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து கொடுத்த இவர் லண்டனில் இன்று சிம்பொனி இசையை அரங்கேற்ற உள்ளார்.


சில ஆண்டுகளுக்கு முன் பண்ணைபுரத்தில் தனது அப்பாவுடன் கையொப்பமிட்டு ஹார்மோனியம் வாசித்த ஒரு சாதாரண இசைக்கலைஞராக தொடங்கிய இவர் இன்று உலகின் முக்கியமான இசை அரங்குகளில் ஒன்றான லண்டன் இசையரங்கில் தனது இசையை அரங்கேற்றவுள்ளார்.


இவருக்கு ரசிகர்கள் பிரபலங்கள் பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர். இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் "பண்ணைபுரத்தில் ஹார்மோனியம் வாசித்த கைகள், இன்று லண்டனில் சிம்பொனி  படைக்கிறது. சாமி, உங்களால் இந்தியாவிற்கே பெருமை! பாராட்டுகள். " என வாழ்த்தியுள்ளார். 


தற்போது இவர் மாத்திரமின்றி இவரது மகனும் சினிமா உலகில் மிகவும் கலக்கி வருகின்றார். இவர் இசை குடும்பத்தையே செதுக்கி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement