• Sep 29 2025

குடும்பத்தை விட்டுப் பிரிந்து சென்ற ராஜி... உச்ச கட்ட கோபத்தில் பாண்டியன்.! டுடே எபிசொட்

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, பாண்டியன் ராஜி கிட்ட டான்ஸ் விஷயத்தை தவிர வேற எதை வேணும் என்றாலும் என்னட்ட கதை என்கிறார். அதைக் கேட்ட ராஜி அது விஷயமாத் தான் பேசணும் என்று சொல்லுறார். பின் எல்லாரும் ராஜியை பேசிக் கொண்டிருக்கிறார்கள். இதனை அடுத்து பாண்டியன் ஒருத்தரின்ட பேச்சையும் கேக்கிறாய் இல்ல கிளம்பி போறதா இருந்தா போ என்று சொல்லுறார்.


இதனைத் தொடர்ந்து, ராஜி நான் போய்ட்டு வாறன் என்கிறார். அதைக் கேட்ட உடனே எல்லாரும் ஷாக் ஆகுறார்கள். பின் பாண்டியன் கோமதியைப் பார்த்து அந்தப் பிள்ளையோட இஷ்டத்துக்கே போகட்டும் என்கிறார். அதோட இனிமேல் இந்த பொண்ணு விஷயமா  என்கிட்ட எதுவுமே பேச வேணாம் என்று கோபமாக சொல்லுறார் பாண்டியன்.

இதனை அடுத்து ராஜி கதிர் கிட்ட வந்து sorry என்னை தப்பா நினைக்காத நான் கிளம்புறேன் என்கிறார். மேலும் நிறைய விஷயத்தில என் கூட நீ இருந்திருக்க இந்த விஷயத்திலும் எனக்கு சப்போர்ட் பண்ணுவியா என்று கேட்கிறார். பின் கதிரும் ராஜி கூடவே சேர்ந்து போறார். அதைப் பார்த்த கோமதி என்னடா செய்யுற என்று கோபப்படுறார்.அதனை அடுத்து கதிர் ராஜி கூட ரோட்டில சண்டை போட்டுட்டு நான் வரல நீ மட்டும் போ என்று சொல்லிட்டு திரும்ப வீட்ட வாறார்.


அதுக்கும் கோமதி பேசிக் கொண்டிருக்கிறார். இதனை அடுத்து ராஜி சென்னைக்கு போய் அங்க தான் போக வேண்டிய இடத்தை விசாரிச்சுக் கொண்டிருக்கிறார். அந்த நேரம் பார்த்து மீனா ராஜிக்கு போன் பண்ணி பணம் எல்லாம் இருக்கா என்று கேட்கிறார். இதனை அடுத்து ராஜி டான்ஸ் போட்டி நடக்கிற இடத்திற்குப் போய் நிற்கிறார். இதுதான் இன்றைய எபிசொட்.

Advertisement

Advertisement