• Sep 03 2025

போற இடமெல்லாம் காரித் துப்புவாங்க; எங்க அப்பாவுக்கு கிடைத்த சாபம்! மனம் திறந்த குமாரவேல்

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள்  ரசிகர்கள் மத்தியில்  நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இதனால் ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களை  நீண்ட காலம் இழுத்தடிக்கும் அதே சேனல், டிஆர்பியில் குறைந்த சீரியல்களை சட்டென முடித்து விடுவதை வழக்கமாக கொண்டுள்ளது.

அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர் சீரியலுக்கு மக்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இதன் இரண்டாவது பாகம்  கடந்த ஆண்டு  ஆரம்பிக்கப்பட்டது.  பாண்டியன் ஸ்டோர் முதலாவது பாகம்  அண்ணன் தம்பிக்கு  இடையிலான உறவை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. இதன் இரண்டாவது பாகம் தந்தைக்கும் மகன்களுக்கும் இடையிலான உறவை மையப்படுத்தி கொண்டு நகர்த்தப்படுகின்றது. 

இந்த நிலையில், பாண்டியன் ஸ்டோர் 2 சீரியலின் முக்கிய கதாபாத்திரமான குமாரவேல் தனியார் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டி தற்போது வைரலாகி வருகின்றது .


அதில் அவர் கூறுகையில் ,  நிறைய பேர் என்னை திட்டுவாங்க..  ஏன் அந்த பொண்ணு வாழ்க்கையை கெடுக்கிறா என்று.. அத்தோட  உங்க அப்பா பேச்சைக் கேட்டு ஏன் இப்படி பண்ணுறா என்றும் கேட்பார்கள்..  ஆனால் நானா கதை எழுதுறேன்?  நான் போற இடம் எல்லாம் திட்டு வாங்குகின்றேன். அதேபோல என்னுடைய அப்பாவும் போற இடமெல்லாம்  திட்டு வாங்குகின்றார். 

எங்க அப்பா ஒருநாள் பாண்டிச்சேரியில் இருந்து வரும் போது டீ குடிப்பதற்காக  கடை ஒன்றில் நிறுத்தி உள்ளார். அங்கு தெருவை சுத்தம் செய்யும்  பெண் பணியாளர்கள்  அவருடன் பேசி உள்ளார்கள். 

அதில் ஒரு பெண்  நானும்  ஒரு பொண்ண பெத்து இருக்கன்..  ஆனா வயிறு எரிஞ்சு சொல்றேன் நீங்க நல்லாவே இருக்க  மாட்டீங்க  என்று திட்டியுள்ளார். எங்க அப்பா ரொம்ப டென்ஷன் ஆகிட்டாரு.. எங்க அப்பா உண்மையிலேயே ரொம்ப ஜாலியான பர்சன்..

ஆனாலும் எனக்கு ஒரு வித சந்தோஷம்.. ஏனென்றால் நான் உண்மையாகவே அந்த கேரக்டராகவே காணப்படுகின்றேன்..  என்னுடைய கேரக்டருக்கு காரித் துப்புவது தான் பாராட்டு..   அதையும் வாங்கியாச்சு என்று ரொம்ப ஜாலியாக பேசியுள்ளார்.

Advertisement

Advertisement