• Jan 19 2025

வெற்றிமாறனுடன் இணையும் ராகவா லாரன்ஸ்.. ‘வாடிவாசல்’ அவ்வளவு தானா? சூர்யா ரசிகர்கள் சோகம்..!

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

வெற்றிமாறன் படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தில் நடிப்பதற்கு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்று ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். 

தமிழ் புத்தாண்டு தினத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் இரண்டு படங்களின் அறிவிப்பு வெளியானது என்பதை பார்த்தோம். வெங்கட் மோகன் இயக்கத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் ’ஹண்டர்’ என்ற திரைப்படம் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது என்பதும் இந்த படம் ராகவா லாரன்ஸ் 25வது படமாக உருவாக உள்ளது என்பதையும் பார்த்தோம்.

அதேபோல் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகும் படத்திலும் ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளார் என்பதும் இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி வெற்றிமாறன் கதை வசனத்தில் உருவாகும் திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தை கதிரேசன் தயாரிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து தனது சமூக வலைதளத்தில் ராகவா லாரன்ஸ் கூறியிருப்பதாவது: வணக்கம் நண்பர்களே மற்றும் ரசிகர்களே, வெற்றி மாறன் அவர்களின் திரைக்கதையை கேள்விப்பட்டவுடன் அதை கேட்டு நான் இன்ப அதிர்ச்சியடைந்தேன். வெற்றிமாறன் சார் எழுதிய ஒரு பிரமாண்டமான படத்தில் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கிறேன்.

 நான் முன்பு அறிவித்த இரண்டு படஙக்ளுக்கு பிறகு இந்த படத்தில் வேலை செய்ய நான் காத்திருக்கிறேன். இந்த அற்புதமான திரைக்கதையை எனக்கு வழங்கிய வெற்றிமாறன் சாருக்கு எனது மனமார்ந்த நன்றிகள். இந்த படத்தை தயாரிக்கும் கதிரேசன் அவர்களுக்கும் எனது நன்றி’ என தெரிவித்துள்ளார்.

வெற்றிமாறன் அடுத்தடுத்து சில திரைப்படங்களில் பிஸியாகி வருவதால் சூர்யா நடிக்கும் ’வாடிவாசல்’ அவ்வளவுதானா என்ற கேள்வியை அவரது ரசிகர்கள் சோகத்துடன் எழுப்பி வருகின்றனர்.




Advertisement

Advertisement