• Jan 19 2025

ஈஸ்வரி முன் கோபியை அசிங்கப்படுத்திய ராதிகா!மனம் மாறும் ஜெனி? பாக்கியாவுக்கு அடித்த அதிஷ்டம்! புதிய திருப்பங்களுடன் பாக்யலட்சுமி

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

பாக்யலட்சுமி சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்குது என்று பார்ப்போம் வாங்க.

அதன்படி,கோபியிடம் 'ஜெனி இல்லாம இருக்க முடியலபா' என கதறி அழுகிறார் செழியன். இதை பாக்கியா பார்த்து கவலை படுகிறார்.மேலும் செழியனுக்கு ஆறுதல் கூறுகிறார் கோபி.'கொஞ்ச நாளைக்கு ஒர்க்ல கவனத்த செலுத்து, எல்லாம் சரியா வரும்'.எல்லாம் மாறுமென கூறுகிறார்.

மறுபுறம் ஜெனிக்கு வாய்ஸ் போடுகிறார் பாக்கியா.அதை பார்த்து விட்டு பேசாம இருக்கிறார் ஜெனி. 'உன்ன என் பொண்ணா தான் நினைச்சன். உன்னையும் இனியா மாதிரி தான் பாத்தன்.உன்ன ரொம்ப மிஸ் பண்ணுறன் ஜெனி. நீ ரொம்ப ஜோசிக்காதம்மா..எல்லாம் கொஞ்ச நாளைக்கு தான் எல்லாம் சரியா வரும். ஒரு அம்மாவா நான் உன் கூட எப்பவும் இருப்பன்' என சொல்கிறார்.இதை கேட்டு ஜெனி அழுகிறார்.

இன்னொரு பக்கம் பழனிச்சாமி, பாக்கியா, எழில் மூவரும் சந்தித்து பேசுகின்றனர். அதன் படி பழனி சொல்லுகையில்,'சென்னையில் பொருட்காட்சி 15நாள் நடக்கபோகுது, அதுல கேன்டின் நடத்தலாம்.நீங்க டெண்டர் குடுங்க நிச்சயம் உங்களுக்கு ஆர்டர் கிடைக்கும்' என ஐடியா கொடுக்கிறார்.இத கேட்ட சந்தோஷத்தில் பழனிக்கு கைகொடுத்து சந்தோசப்படுகிறார் எழில். நான் உனக்கு துணையா இருப்பன் என எழிலும் பாக்கியாவுக்கு சொல்லுகிறார்.


இதை தொடர்ந்து வீட்டுக்கு போன பாக்கியா, வீட்டில் உள்ள அனைவரையும் வர சொல்லி நடந்தவற்றை சொல்லுகிறார்.எல்லாரும் சந்தோசப்பட 'இதுக்கு தான் இவ்வளவு ஆர்ப்பாட்டமா' என ஈஸ்வரி சொல்ல, கோபியிடம் கேட்கிறார் இப்படி ஆர்டர் கிடைக்குமா என, அதற்கு 'ரொம்ப கஷ்டம் கிடைக்கிறது' என கோபியும் சொல்கிறார்.மேலும் ஓவர் காம்பெடிஷன் உடம்புக்கு ஆகாது என பாக்கியாவுக்கு சொல்ல, அந்த நேரத்தில் ராதிகா அங்கு வருகிறார். வாங்க கோபி ஆபிஸ் போவம் என கூப்பிட்ட டென்டர் விசயத்துல அட்வைஸ் பண்ணிட்டு இருக்கன் என கோபி சொல்ல, ஆமா நம்ம பிசினஸ்சே மூழ்கி போய் கிடக்கு...இதுல நீங்க அடுத்தவங்களுக்கு அட்வைஸ் பண்ணுறீங்களா என கேட்க அனைவரும் சிரிக்கின்றனர்.இத பார்த்து கோவப்பட்ட ஈஸ்வரி புருஷன இப்படியா எல்லார் முன்னாடியும் அசிங்கப்படுத்துற என கேக்கஇ அப்பாடி எப்ப சரி கோபி என் புருஷன் என ஒத்துக்கிட்டிங்களே என சொல்ல வா ராதிகா ஆபிஸ் போவம் டைம் ஆகுது என நைசா நழுவுகிறார் கோபி.

மீண்டும் டென்டர் விஷயத்தில் கோபியின் அப்பா ஆதரவாக பேச ஈஸ்வரி சரிவராது என்பது போல சொல்கிறார்.பாக்கியாவும் எழிலும் டென்டர்   விஷயமாக வெளியே செல்லும் போதும் ஈஸ்வரி அவர்களை மனசங்கடம் ஏற்படுமாறு நடத்துகிறார். இறுதியில் ஒருவழியாக வீட்டில் இருந்து கிளம்புகின்றனர். எனவே பொறுத்து இருந்து பார்ப்போம் பாக்கியாவுக்கு டென்டர் கிடைக்குமா என்பதை....

Advertisement

Advertisement