• Apr 28 2024

ஸ்டன்னிங் லுக்கில் பிரியா பவானி சங்கர்…நம்பவே முடியல…லேட்டஸ் போட்டோ ஷூட்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் வளர்முக நடிகையாக விளங்குபவர் நடிகை பிரியா பவானி சங்கர் ஆவார். ஆரம்பகாலத்தில் 'புதிய தலைமுறை' தொலைக்காட்சியின் நிகழ்ச்சித் தொகுப்பாளராக விளங்கிய இவர் 'கல்யாணம் முதல் காதல் வரை' எனும் தொலைக்காட்சித் தொடரில் நடித்தமையால் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

மேலும் 2017-ஆம் ஆண்டு இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் வெளிவந்த 'மேயாத மான்' என்ற திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். தனது முதல் திரைப்படத்திலேயே சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியமையால் சைமாவின் 'சிறந்த பெண் அறிமுக நடிகை' விருதைப் பெற்றுக் கொண்டார்.

இவரது நடிப்பில் வெளிவந்த ஏனைய படங்களாக 'கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாபியா சாப்டர் 1' போன்ற படங்களைக் குறிப்பிடலாம். இவை தவிர 'குருதி ஆட்டம், காதலில் சந்திப்போம், கசட தபற, பொம்மை, இந்தியன் 2' போன்ற படங்கள் இவரது நடிப்பில் இன்னும் வெளிவராத படங்களாக உள்ளன.

மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிடும் வழக்கத்தைக் கொண்டவர். அந்தவகையில் தற்போது இவரால் வெளியிடப்பட்டுள்ள அழகிய புகைப்படங்கள் ரசிகர்களால் பெரிதும் லைக்ஸ் செய்யப்பட்டு வருவதைக் காணலாம். இதில் இவர் ஸ்டன்னிங் லுக்கில் இருப்பதால் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement