• Apr 28 2024

மாஸ் காட்டும் 'பிரின்ஸ்'... இரண்டே நாளில் இத்தனை கோடி வசூலா... மகிழ்ச்சியின் உச்சத்தில் படக்குவினர்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் ஆரம்பத்தில் சின்னத்திரையில் இருந்து பின்னர் தன்னுடைய கடின உழைப்பினால் வெள்ளித்திரைக்கு வந்து இன்று தமிழ் சினிமாவின் வெற்றி நாயகனாக வலம் வருகின்றார். 


அதுமட்டுமல்லாது இவர் நடிக்கும் படங்கள் அனைத்துமே வெற்றிப்படங்கள் தான் என்று கூறுமளவிற்கு இன்று வளர்ந்து நிற்கின்றார்.

அந்தவகையில் இவரின் நடிப்பில் வெளியாகிய 'டாக்டர்' திரைப்படமானது இவருக்கு அதிகளவில் வெற்றியை பெற்றுக் கொடுத்தது. அதனைத் தொடர்ந்து அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் 'டான்' திரைப்படம் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றி அடைந்தது. 


இந்நிலையில் தொடர்ச்சியாக இரண்டு வெற்றிகளை பெற்ற சிவகார்த்திகேயன் நடிப்பில் ஹாட்ரிக் வெற்றியை குறிவைத்து தற்போது 'பிரின்ஸ்' படம் வெளியாகி இருக்கின்றது. அதாவது தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் முதல் முறையாக சிவகார்த்திகேயன் நடித்து நேற்று வெளிவந்த திரைப்படம் தான் பிரின்ஸ்.

இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து மரியா எனும் அறிமுக நடிகை நடித்திருந்தார். இவர் உக்ரைன் நாட்டை சேர்ந்த மாடல் ஆவர். மேலும், இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடித்திருந்தார். நேற்று வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


இத்திரைப்படம் வெளியாவதற்கு முன்பே கிட்டத்தட்ட ரூ. 50 கோடி வரை தயாரிப்பாளருக்கு டபிள் இலாபத்தை பெற்றுக் கொடுக்கும் என்று ஒரு தகவல் வெளிவந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் வெளியான இப்படமானது முதல் நாள் மட்டுமே தமிழகத்தில் சுமார் ரூ. 6 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. அத்தோடு இரண்டாவது நாளிலும் சற்றும் குறையாமல் ரூ. 12 கோடிக்கும் மேல் தமிழகத்தில் வசூல் செய்துள்ளது.இதனால் படக்குழுவினர் மிகுந்த சந்தோசத்தில் உள்ளனராம்.

Advertisement

Advertisement

Advertisement