• Jan 18 2025

'மாவீரம் போற்றுதும்' தமிழீழ மாவீரர்களுக்கு தலைவர் விஜயின் உருக்கமான பதிவு..

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்த மாவீரர்களின் நினைவாக நவம்பர் 27 மாவீரர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில், தமது உயிரை ஈகம் செய்த போராளிகளை நினைவுகூரும் வகையில், பலரும் உருக்கமான உரைகள் மற்றும் நினைவுப்பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ் சமூகத்தில் பிரபலமான தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் தனது சமூக ஊடகங்களில் பதிவொன்றை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் "மாவீரம் போற்றுதும், மாவீரம் போற்றுதும்”என குறிப்பிட்டுள்ளார்.

தலைவர் விஜயின் இந்த பதிவு, தமிழ் சமூகத்திலும், மக்களிடையிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பலரும் அவரது கருத்துகளை பகிர்ந்து, தங்களுடைய மரியாதையைத் தெரிவித்து வருகின்றனர். “தமிழீழ மாவீரர்களின் நினைவில், அவர்களின் இலட்சியத்தை வழிவகுக்கும் செயல்பாடுகள் தொடர வேண்டும்” என பலரும் சமூக ஊடகங்களில் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

Advertisement

Advertisement