• Feb 22 2025

நாக சைத்தன்யா - சோபிதா திருமணம்..பொய்யான செய்திகள் குறித்து நெருக்கமான வட்டாரங்கள் தகவல்

Mathumitha / 2 months ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான நாக சைத்தன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபாலா நெருக்கம் குறித்து சமீபகாலமாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன. சமீபத்தில், இவர்கள் இருவருக்கும் எளிமையான நிச்சயதார்த்தம் நடைபெற்றது, திருமணமும் விரைவில் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் நடைபெறும் என கூறப்படுகிறது.


இந்நிலையில், நாக சைத்தன்யா - சோபிதா திருமணத்தை நெட்ப்ளிக்ஸ் ரூ.50 கோடிக்கு ஒளிபரப்ப உரிமம் பெற்றது என்ற செய்தி வைரலாகி வருகிறது. இதுகுறித்து, இருவரின் நெருக்கமான வட்டாரங்கள் தகவல் அளித்துள்ளன."திருமணம் தனிப்பட்ட மற்றும் ரகசியமான நிகழ்வாக இருக்கும்," என நெருங்கிய வட்டாரங்கள் விளக்கம் அளித்துள்ளன "நெட்ப்ளிக்ஸ் ஒப்பந்தம் குறித்த தகவல்கள் முழுக்க முழுக்க பொய்யானவை என பத்திரிகையாளர் ஒருவர் தனது x தள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற வதந்திகள் எங்கள் குடும்பத்திற்கும், திருமணத் திட்டத்திற்கும் தேவையில்லாத பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது" எனத் தெரிவித்துள்ளனர்.சோபிதா மற்றும் நாக சைத்தன்யா இருவரும் இந்த விவகாரத்தில் அமைதியாக இருக்க விரும்புகின்றனர், மேலும் இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளியிடப்படவில்லை.

Advertisement

Advertisement