• Apr 27 2024

விரைவில் 4ஆவது திருமணம்... அம்மா நடிகையை திருமணம் செய்யவுள்ள பிரபல நடிகர்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 'கவுரவம், அயோக்யா, க.பெ.ரணசிங்கம், வீட்ல விசேஷம்' உள்ளிட்ட பல படங்களில் நடித்துப் பிரபலமானவர் நடிகை பவித்ரா. இவர் கன்னடத்தை சேர்ந்த ஒரு நடிகையாவார். அதுமட்டுமல்லாது இவர் ஏற்கனவே 2 முறை திருமணமாகி விவாகரத்து பெற்றவர். 


இந்த நிலையில் தெலுங்கு நடிகருமும்,தெலுங்கு சூப்பர் ஸ்டாரான நடிகர் மகேஷ் பாபுவின் சகோதரருமான நரேஷை காதலித்து திருமணம் செய்து கொள்ள தயாராகி வருவதாக சமீபத்தில் தகவல் பரவியது. நரேஷும் 2 முறை திருமணமாகி விவாகரத்து ஆன ஒருவர் தான். இவர் 3-ஆவதாக ரம்யா ரகுபதி என்பவரை மணந்து அவரையும் சமீபத்தில் விவாகரத்து செய்து உள்ளார். 


மேலும் சமீபத்தில் ஒருமுறை நரேஷும், பவித்ராவும் மைசூருவில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி இருப்பதாக தகவல் அறிந்து அவர்கள் தங்கி இருந்த அறையை ரம்யா ரகுபதி முற்றுகையிட்டு ரகளை செய்தார். அறை கதவை தட்டித் தாறுமாறாக கூச்சல் போட்டார். தகவல் அறிந்து போலீசார் விரைந்து வந்து நரேஷையும், அவருடனிருந்த பவித்ராவையும் அறையில் இருந்து வெளியே பாதுகாப்பாக அழைத்து வந்தனர். 

அந்த சமயத்தில் அவர்கள் இருவரையும் ரம்யா ரகுபதி செருப்பால் அடிக்க ஆவேசமாக பாய்ந்தார். உடனே போலீசார் குறுக்கிட்டு அடிக்க விடாமல் தடுத்தனர். செருப்பால் அடிக்க வந்த ரம்யாவை பார்த்து நரேஷ் விசில் அடித்து கேலி செய்தபடி அங்கிருந்து சென்றார். இந்த வீடியோ ஆனது சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. 


இந்நிலையில் தான் தற்போதும் பவித்ரா லோகேஷுடன் நெருக்கமாக பழகி வருகின்றார். பவித்ரா சினிமாவில் அம்மா வேடங்களுக்கு நன்கு புகழ்பெற்றவர். இவர் பல படங்களில் ஹீரோ, ஹீரோயின்களுக்கு அம்மாவாக நடித்துள்ளார். அந்தவகையில் நரேஷ் மற்றும் பவித்ரா லோகேஷ் 2018ஆம் ஆண்டு 'சம்மோகனம்' படப்பிடிப்பின் போது சந்தித்தனர். 

அந்த சந்திப்பிலேயே இருவரும் நெருங்கிய உறவை வளர்த்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து நடிகர் நரேஷ் மற்றும் பவித்ரா லோகேஷ் இருவரும் இந்த ஆண்டு திருமணம் செய்து கொள்ள தயாராக இருப்பதாக சமீபத்தில் சமூக ஊடகங்களில் அறிவித்தனர். 


அந்தவகையில் தற்போது தனது டுவிட்டர் வீடியோவில், நரேஷ் தனது மனைவியாக இருக்கும் பவித்ராவை முத்தமிட்டு தனது ரசிகர்களுக்கு 2023 புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த நிலையில் பவித்ரா லோகேஷ் வெளியிட்டு உள்ள புத்தாண்டு செய்தியில் "புதிய ஆண்டு. புதிய தொடக்கங்கள். உங்கள் அனைவரின் ஆசியும் வேண்டும். எங்களிடமிருந்து உங்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். - பவித்ரா நரேஷ்," என்று குறிப்பிடப்படுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement