• Apr 19 2024

பிரபல நடிகரை திருமணம் செய்யவுள்ள தோனி பட நடிகை- காதல் கிசுகிசுவுக்கு முற்றுப்புள்ளி வைச்சாச்சு

stella / 1 year ago

Advertisement

Listen News!


பாலிவூட் சினிமாவில் கடந்த 2014ம் ஆண்டு வெளியான ஃபக்ளி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் கியாரா அத்வானி. இதனைத் தொடர்ந்து மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் எம்எஸ் தோனி தி அன்டோல்டு ஸ்டோரி படத்தின் மூலம் பெரும் பிரபலமானார்.

தொடர்ந்து தெலுங்கு படங்களிலும் என்ட்ரி கொடுத்த கியாரா அத்வானி, இந்தி தெலுங்கு என கலக்கி வருகிறார்.அந்த வகையில் தற்பொழுது ராம் சரண் நடிப்பில் சங்கர் உருவாக்கி வரும் புதிய படத்தில் நடித்து வருகின்றார்.மேலும் இவர்  பிரபல பாலிவுட் நடிகரான சித்தார்த் மல்ஹோத்ராவும் காதலித்து வருவதாக கடந்த சில மாதங்களாக தகவல் வெளியானது.


 இருவரும் அடிக்கடி டேட்டிங் சென்று வருவதாக கூறப்படும் நிலையில் அவர்கள் இருவரும் ஒன்றாக பார்ட்டி பண்ணும் போட்டோக்களும் வீடியோக்களும் வெளியாகி பரபரப்பை கிளப்பி வருகிறது.இந்நிலையில் இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கடந்த சில மாதங்களாக காதல் என கிசுகிசு பரவி வரும் நிலையில் கியாரா அத்வானியும் சித்தார்த் மல்ஹோத்ராவும் துபாயில் பார்ட்டி கொண்டாடியுள்ளனர். இந்த பார்ட்டியில் கரண் ஜோஹர் மற்றும் ராணி முகர்ஜி உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர்.


இந்த பார்ட்டியில் சித்தார்த் மல்ஹோத்ராவும் கியாரா அத்வானியும் மோதிரம் நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் வரும் பிப்ரவரி 6ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மாரில் உள்ள பிரபல அரண்மனையில் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

திருமணத்திற்கு முந்தைய மெஹந்தி, ஹல்டி மற்றும் சங்கீத் நிகழ்ச்சிகள் பிப்ரவரி 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் நடைபெறும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement