• Apr 27 2024

ஜோடியாக வந்த சிவகார்த்திகேயன் மற்றும் அதிதி- மாவீரன் படக்குழுவின் பொங்கல் கொண்டாட்ட புகைப்படங்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

டாக்டர் திரைப்படம் மூலம் கம்பேக் கொடுத்த சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து டான், பிரின்ஸ் என வெரைட்டி காட்டினார். அதனைத் தொடர்ந்து தற்பொழுது இயக்குநர் மடோன் அஸ்வின், இயக்கத்தில் மாவீரன் என்னும் திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.இப்படத்தில் கதாநாயகியாக அதிதி சங்கர் நடித்து வருகின்றார்.


தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தில்  சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக மிஷ்கின் நடித்து வருகின்றனர். இந்தப் படத்திற்காக சிவகார்த்திகேயன் வைத்துள்ள புதிய லுக் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது இந்நிலையில் மாவீரன் படக்குழுவினர் பொங்கல் கொண்டாடியுள்ளனர்.

 வேஷ்டி சட்டையில் கெத்தாக சிவகார்த்திகேயனும், பாவாடை தாவணியில் க்யூட்டாக அதிதியும் பொங்கலை கொண்டாடியுள்ளனர். அவர்களுடன் நடிகை சரிதா உள்ளிட்ட மாவீரன் படக்குழுவினர் இந்தப் பொங்கல் கொண்டாட்டத்தில் பங்கேற்றுள்ளனர். அதுமட்டும் இல்லாமல் குரூப் போட்டோ எடுத்தும் மாஸ் காட்டியுள்ளனர்.


மாவீரன் படக்குழுவினர் பொங்கல் கொண்டாடிய வீடியோ ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. முன்னதாக சிவகார்த்திகேயன் சொந்த தயாரிப்பு நிறுவனத்தால் கடன் பிரச்சினையில் சிக்கியதாக சொல்லப்பட்டது. மேலும், இந்த கடன் சிக்கலால் மாவீரன் படம் ரிலீஸாவது சந்தேகமே எனவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், இதெல்லாம் வெறும் வதந்தி தான் என்றும், விரைவில் மாவீரன் படத்தின் ரிலீஸ் தேதியை படக்க்ழு அறிவிக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.


Advertisement

Advertisement

Advertisement