இசை உலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக ஏ.ஆர். ரகுமான் திகழ்கிறார். சமீபத்தில் அவர் சமூக பாகுபாடு மற்றும் கலாச்சார முக்கியத்துவம் தொடர்பாக கூறிய கருத்துகள் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. பல பாலிவுட் பிரபலங்கள் இதற்கு எதிர்மறை விமர்சனங்களை வெளியிட்டனர்.

இதனால் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் தனது நிலைப்பாட்டை விளக்க வீடியோ வெளியிட்டு பதிலளித்துள்ளார்.
அவர் தனது வீடியோவில், “அன்புள்ள நண்பர்களே, இசை என்பது கலாச்சாரத்துடன் இணைவதற்கும், அதைக் கொண்டாடுவதற்கும், மரியாதை செலுத்துவதற்கும் நான் பயன்படுத்தி வரும் ஒரு வழி. இந்தியா எப்போதுமே எனது வீடு, எனது ஆசிரியர் மற்றும் எனது உந்துகோலாக இருக்கிறது. சில நேரங்களில் நோக்கங்கள் தவறாக புரிந்துகொள்ளப்படலாம் என்பதை நான் இப்போது புரிந்துகொண்டேன்.
இசையின் மூலம் சேவை செய்ய வேண்டும் என்பதே எப்போதும் என்னிடம் இருந்து வருகிறது. யாரையும் காயப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஒருபோதும் இல்லை. என் எண்ணம் புரிந்துகொள்ளப்படும் என்று நம்புகிறேன்.” என்று கூறியுள்ளார்.
ஏ.ஆர். ரகுமானின் கருத்துகளை சிலர் தவறாக புரிந்துகொண்டு கடுமையான விமர்சனங்களை வெளிப்படுத்தினர். அவர்களுக்கு தற்பொழுது வெளியான வீடியோ சிறந்த பதிலை அளிக்கின்ற வகையில் அமைந்துள்ளது.
Listen News!