• Mar 29 2024

"பத்து தல ஒரு வெத்து தல, சிம்பு ஒரு டம்மி பீஸ்".. பந்தாடிய ப்ளூ சட்டை.. கடுங்கோபத்தில் ரசிகர்கள்..!

Prema / 11 months ago

Advertisement

Listen News!

சிம்புவின் பத்து தல படமானது நேற்றைய தினம் உலகம் எங்கிலும் உள்ள தியேட்டர்களில் வெளியாகி இருக்கின்றது. இப்படத்தைப் பார்த்து விட்டு ரசிகர்கள் பலரும் கலவையான விமர்சனகளைப் பதிவிட்டு வரும் அதேநேரத்தில் பிரபல சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறனும் தனது கருத்தைத் தெரிவித்து இருக்கின்றார். 


அந்தவகையில் அவர் கூறுகையில் "சிம்பு நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள பத்து தல படம் நல்ல படமாக இருக்கும் என நம்பிப் போய் தியேட்டரில் ரசிகர்கள் உட்கார்ந்தால், அந்த படத்தில் கடைசி வரை வெறும் பில்டப் மட்டுமே செய்து ரசிகர்களை ஏமாற்றுகின்றனர். பத்து தல வெத்து தல" என ப்ளூ சட்டை மாறன் விமர்சித்துள்ளார்.

அதுமட்டுமல்லாது "கேஜிஎஃப் படத்தில் மைன்களை வைத்து கதை அமைந்த நிலையில், எல்லா இயக்குநர்களும் மைன்களை நோக்கியே தற்போது ஓடிக் கொண்டிருக்கின்றனர். வாரிசு, தசரா, பத்து தல என எல்லா படங்களிலுமே மைன் ஒரு முக்கிய கருவாக மாறி இருக்கின்றது.

மைன்களை குண்டு வைத்து தகர்க்க முடியாது ஏற்கனவே குண்டு வைத்து வெடித்துத் தான் அதை உண்டாக்குறாங்க, வேணும்னா மண்ணை அள்ளிப் போட்டு மூடிடலாம். இல்லைன்னா நம்மள மண்ணை அள்ளிப் போட்டு மூடிடுவானுங்க போல" எனக் குத்திக்காட்டி பத்து தல விமர்சனத்தோடு சேர்த்து ஏனைய படங்களையும் கூறியுள்ளார்.


அத்தோடு "இந்த படத்தில் கெளதம் மேனன் வில்லன் என்று யாராவது சொன்னால் தான் உண்டு என்பது போல மொக்கை வில்லனாகவே அவர் வருகிறார். துணை முதல்வர் என சொல்லிக் கொண்டு வரும் கெளதம் மேனன் கடைசியில் கிளைமேக்ஸில் அடியாட்களை வைத்துக் கொண்டு சிம்புவுடன் மோதும் காட்சிகள் எல்லாம் பார்ப்பவர்களுக்கு குபீரென சிரிப்பை வரவழைக்கின்றது" எனவும் கூறியுள்ளார்.


மேலும் 'மொக்கை வில்லனை போலவே அட்மாஸ்பியர் ஆர்ட்டிஸ்ட்டாகவே இந்த படத்தில் ஹீரோயினான பிரியா பவானி சங்கர் வந்து போகிறார். அவருக்கு படத்தில் பெரிதாக வேலை இல்லை என்று சொல்ல முடியாது, அறவே அவருக்கு வேலையே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்" எனவும் கூறி வெளுத்து வாங்கி உள்ளார்.

அதுமட்டுமல்லாது "சிஎம்மை முதல் சீனிலேயே கடத்திடுறாங்க அவர் உயிரோடு இருக்காரா, கொல்லப்பட்டாரா, அவரை கடத்தியது ஏஜிஆர் தான் என்பது தெரிந்தும் அவரை நெருங்க முடியாத நிலையில், கெளதம் கார்த்திக்கை அண்டர்கவராக அனுப்புகின்றனர். ஏஜிஆரை நெருங்கிய உடனே அவர் எவ்ளோ பெரிய வல்லவரு, நல்லவருன்னு கெளதம் கார்த்திக்கு தெரிய வந்ததும் அப்புறம் அவர் என்ன பண்ணுவாரு, அதே தான் கிளைமேக்ஸ்" எனக் கூறி ஒட்டு மொத்த படக்கதையையும் கலாய்த்துள்ளார்.


அதேபோல் "கன்னடத்தில் இந்த படத்தில் சிவராஜ்குமார் நடித்திருப்பார். அங்கே உள்ள அரசியல் சூழலுக்கும் அவரது மாஸுக்கும் இந்த படம் வொர்க்கவுட் ஆனது. ஆனால், இங்கே சிம்பு யாரு இவரு ஒரு டம்மி பீஸ், இவருக்கு ஏன் இந்த தேவையில்லாத வேலை" என ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தில் வழக்கம் போல தனிப்பட்ட தாக்குதலிலும் ஈடுபட்டுள்ளது சிம்புரசிகர்களை கடும் கோபத்தில் ஆழ்த்தி உள்ளது.

Advertisement

Advertisement

Advertisement