பார்த்திபன் நடித்த இயக்கிய ‘டீன்ஸ்’ திரைப்படம் வரும் 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் சென்சார் பணிகள் முடிந்து தற்போது சென்சார் சான்றிதழ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
‘டீன்ஸ்’ திரைப்படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் 'யூ’ சான்றிதழ் அளித்துள்ளனர். நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழ் திரைப்படம் 'யூ’ சான்றிதழ் பெற்றுள்ளதை அடுத்து குடும்பத்தோடு பார்க்கும் வகையில் இந்த படம் அமைந்துள்ளது.
மேலும் இந்த படத்தின் ரன்னிங் டைம் 127 நிமிடங்கள் மற்றும் 28 வினாடிகள் ரன்னிங் டைம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தான் ஒரு சாதனை மிஸ் ஆகிவிட்டதாக நெட்டிசன் ஒருவர் கண்டுபிடித்து சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
அதாவது ஒருவேளை இந்த படத்தின் ரன்னிங் டைம் 4 வினாடிகள் குறைவாக இருந்திருந்தால் 127 நிமிடங்கள் 24 வினாடிகள் என்று இருந்திருக்கும், அதாவது 12-7-24 என்ற இந்த படத்தின் ரிலீஸ் தேதியாக இருந்திருக்கும் என்று சுட்டிக்காட்டியுள்ளார். எதையும் வித்தியாசமாக யோசிக்கும் பார்த்திபன் இதில் எப்படி கோட்டை விட்டார் என்றும் கூறப்பட்டு வருகிறது.
பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் ஒரு காட்டுப் பகுதிக்கு செல்லும் நிலையில் அங்கு அவர்களுக்கு ஏற்படும் ஒரு திரில் அனுபவம் தான் இந்த படத்தின் கதை என்றும் ஆரம்பம் முதல் முடிவு வரை த்ரில் மற்றும் சஸ்பென்ஸ் உடன் கூடிய படமாக ‘டீன்ஸ்’ படம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
மேலும் இந்த படத்திற்காக டிக்கெட் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது என்றும் தமிழ்நாடு முழுவதும் இந்த படத்திற்கு முதல் சில நாட்கள் 100 ரூபாய் தான் டிக்கெட் கட்டணம் என்றும் பார்த்திபன் அறிவித்திருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
Must watch on the 12th itself
TEENZ from July 12th in Cinemas Worldwide@rparthiepan@immancomposer@dopgavemic@k33rthana@GenauRanjith@lramachandran@AdithyarkM
@Iam_Nithyashree@shreyaghoshal@Arivubeing@iYogiBabu@onlynikil@j_prabaahar@shrutihaasan@CVelnambi… pic.twitter.com/RZOf3x6nkW
Listen News!