• Jan 18 2025

ஹனிமூன் விஷயத்தில் பாண்டியன் எடுத்த அதிரடி முடிவு.. அனைவருக்கும் சந்தோஷம்.. தங்கமயிலுக்கு மட்டும் அதிர்ச்சி..!

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் இன்றைய எபிசோடில்  மீனா மற்றும் ராஜி ஆகிய இருவரும் டியூஷன் சொல்லிக் கொடுக்கும் இடத்திற்கு கிளம்புகின்றனர். அப்போது யாரிடமும் மாட்டிக்கொள்ளாமல் பொய் சொல்லி கிளம்ப வேண்டும் என்று திட்டமிட்ட நிலையில், கோமதியிடம் ராஜி தனது படிப்பு முடிய போகிறது, கவர்மெண்ட் வேலைக்கு செல்ல வேண்டும் என்பதால் கோச்சிங் கிளாஸ் செல்ல வேண்டும், அதற்கு செல்கிறோம் என்று சொல்கிறார்.

அப்போது அங்கு திடீரென தங்கமயில் வர, அவர் மாறி மாறி கேள்வி கேட்கிறார். ஒரு கட்டத்தில் ராஜி அவருக்கு  பதில் சொல்ல திணறிக் கொண்டிருக்கும் நிலையில் திடீரென மீனா உள்ளே புகுந்து ’நீங்களும் நன்றாக படித்திருக்கிறீர்கள், நீங்களும் கோச்சிங் கிளாஸ் வாருங்கள், இந்த வீட்டில் மூன்று மருமகளும் கவர்மெண்ட் வேலை பார்த்தால் நன்றாக இருக்கும்’ என்று சொல்ல உடனே அதிர்ச்சி அடைந்த தங்கமயில், ’நான் வரவில்லை எனக்கு உள்ளே வேலை இருக்கிறது’ என்று சொல்லி சென்று விடுகிறார்.

இதனை அடுத்து ராஜி மற்றும் மீனா சாலையில் நடந்து செல்லும் போது ’எனக்கு பயமாக இருக்கிறது, யாருக்கும் தெரியாமல் இதை செய்கிறோம்’ என்று ராஜி சொல்ல ’பயப்படாதே நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று மீனா ஆறுதல் கூறுகிறார்.



இந்த நிலையில் டியூஷன் எடுக்கும் வீட்டுக்கு சென்றபோது அங்குள்ள இரண்டு குழந்தைகளும் சேட்டை செய்ய ராஜி அவர்களை சமாளிக்க முடியாமல் திணறுகிறார். அப்போது அங்கு வரும் மீனா குழந்தைகளை மிரட்டி படிக்க வைக்கிறார்.

இந்த நிலையில் இரவில் அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது ராஜி,  ’தான் கோச்சிங் கிளாஸ் செல்வது குறித்து பாண்டியனிடம் கூறுகிறார். அப்போது சிறிது நேரம் யோசித்த பாண்டியன் அதன் பிறகு அனுமதி அளிக்கிறார். இதனால் ராஜி சந்தோஷம் அடைகிறார்.

இந்த நிலையில் பாண்டியன் திடீர் என கதிர் மற்றும் மீனா ஆகிய இருவருக்கும் லீவு கிடைக்குமா? என்று கேட்க, இருவருமே கிடைக்கும் என்று கூறுகின்றனர். அப்போது பாண்டியன், ‘தங்கமயில் சரவணன் ஹனிமூன் செல்வது போல் மூன்று ஜோடியும் சேர்ந்து ஹனிமூன் செல்லட்டும்’ என்று கூற கோமதியின் முகத்தில் அப்போது தான் சிரிப்பு வருகிறது. பாண்டியனின் முடிவு வீட்டில் உள்ள அனைவருக்கும் சந்தோஷத்தை ஏற்படுத்தியது. ஆனால் தங்கமயில் மட்டும் அதிர்ச்சி அடைவதுடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வருகிறது.  

Advertisement

Advertisement